பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



கண்ணா துக்கத்தைத் தாங்க முடியாமல் வீட்டின் பின் கட்டுக்கு விரைந்தாள்: கண்ணப்பனும் அவளுக்கு ஆறுதல் சொல்லுவதற்காக கண்ணாவைப் பின்தொடர்ந்து சென்றான்.


எவ்வளவு சமாதானம் சொல்லியும் கண்ணாவின் அழுகை அடங்கவில்லை.

"இந்த வீட்டில் இதற்கு மேல் ஒரு விநாடி கூட இருக்க முடியாது" என்றாள் கண்ணா

"கண்ணா, உன்னுடைய முடிவுக்கு நான் உனக்கு முன்னாடியே வந்து விட்டேன். ஆனால் எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அதை மட்டும் நீ எனக்கு அனுமதி! கண்ணா, என் பெற்றோர்கள் உன்னை மட்டும் பரிகசிக்கவில்லை. என்னையும் சேர்த்துத்தான். இழிவு படுத்துகிறார்கள். அதனால் தான் கொஞ்சம் அவகாசம் தேவை என்கிறேன்."

"பொறுத்துப் பொறுத்துத்தான் என் கன்னங்கள். நிரந்தரமாகக் கறை படிந்து விட்டதே! இன்னும் நான் பொறுத்தால் என் கண்களே அவிந்து போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.*

இந்த நேரத்தில் மீனா அங்கே வந்தாள்.

"அக்கா, இந்தப் பிரச்சினையில் நீங்கள் என்னைச் சம்மந்தப்படுத்திப் பேசுவது சரியில்லை."

இதற்கு கண்ணா ஏதாவது விபரீதமான பதிலைக் கூறி விடுவாளோ என்று நினைத்து கண்ணப்பனே குறுக்கிட்டு விட்டான்.

"மீனா, நம் வீட்டுப் பிரச்சினை உன்னைப் பற்றியோ, கண்ணாவைப் பற்றியோ எழுந்ததல்ல வெளிப்படையாகச் சொல்லுவதானால் அது என்னைச் சுற்றி வளைத்திருக்கும் பிரச்சினை. நான் தான் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஆனால் மீனா நீ ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது. நீ இந்த வீட்டில் சிறிய மருமகளாக - வருவதற்குக் கண்ணாதான் முக்கிய காரணம் என்பதை மட்டும் மறந்து விடாதே!"