பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 'பெண்ணின் அழகு பூவின் அழகைப்போல் நிரந் தரமறறது. ஆணுல் பெண்ணின் குணம் தங்கத்தின் குணத் தைப் போல் ஒளிமங்காதது ' என்று அடிக்கடி கண்ணப் பன் கண்ணுத்தாளிடம் கூறி அவளேப் பெருன்மப்படுத்தி கண்ணுத்தாளும் அவனிடம் அப்படித்தான் பழகி ளுள். எவ்வளவு நேரமானலும் கண்ணப்பன் வந்த பிறகு தான் அவள் சாப்பிடுவாள். கண்ணப்பனுக்குப் பிடித்த மானதைத் தான் அவள் சமைத்து வைப்பாள். ஒரு பெண் ணுக்குப் புருஷன்தான் மூலதனம், புருஷன் அவளிடம் காட்டும் அன்புதான் மனைவிக்குக் கிடைக்கும் வட்டி-என் பதில் கண்ணுத்தாள் இரண்டாவது கண்ணகியாகவே விளங்கிளுள். - - - கிண்ணுத்தாள் கொச்சிக்குத் திரும்பாதது கண்ணப்பனுக்குப் ப ல வி த ம | ன சந்தேகங்களை கிளப்பிக் கொண்டிருந்தது. இ த் த னை வயதுக்கு மேலே நமக்கு இனி பிள்ளேயே பிறக்காது என்று அவள் தீர்மானித்து தகாத முடிவுக்கு வந்துவிட்டால் என்ன் செய்வது? எப்போதுமே நெருக்கடியான நேரங்களில் தான் மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன! அதுவும் அடிக்கடி நெருக்கடிகளைச் சந்தித் திராத செல்லப்பிள்ளை களுக்குக் குழப்பங்கள் வந்துவிட்டால் அவர்கள் கற்பனையின் உச்சக்கட்டம்வரை போய்த்தான் திரும்புவார்கள். 'கண்ணப்பர் இதற்கெல்லாம் குழம்பலாமா?’’ - என்று யாராவது அவனேக் கேட்டால், அதிகமாக இலக் கியமோ, தமிழோ படித்து விட்டால் இப்படித்தான் என் பான். அதோடுவிடமாட்டான்-கவிச்சக்கரவர்த்தி கம்பன் சிறிய துன்பத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமாட்டாராம்! நாவலாசிரியர் டுமாஸ் குடும்பக்கவலையால் நாவல் எழுது வதையே நிறுத்தி விட்டாராம்; அதில் நான் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா ?-என்று விரிவுரை வேறு சொல்ல ஆரம்பித்து விடுவான். புதிதாகச் சந்திப்பவர்கள் அவனை ஒரு மாதிரியாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனது நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் அமைந்து விடும். இளகிய உள்ளத்தை எளிதில் துன்பம் வசப் படுத்திக் கொண்டு விடுகிறது. கண்ணிரைக் க ண் டு கலங்கும் நெஞ்சம் துன்பம் ஏற்பட்டதும் நடுங்கித் தவிக்கிறது. அதனுல்தான் இளகிய நெஞ்சமுடையவர்கள் கோழைகளாக வாழத் தொடங்கிவிடுகிறர்கள். கண்ணப்பன் பிறவியில் கோழை அல்ல; சபலத் தால், தோல்வி மனப்பான்மையால் கோழையாகி