பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3} கடிதத்தைப் படித்து முடித்ததும் தலையிலே மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு நெருப்பை வைத்துக் கொள்ளலாம் போல் தோன்றியது கண்ணப்பனுக்கு. பல ஆண்டு காலமாக சேகரித்து வைக்கப்பட்ட உண்டியல் திருட்டுப் போனதைப் போல, உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய வீட்டில் இடி விழுந்து விட்டதைப் போல அவன் மனம் புழுவாகத் துடித்தது, - - ' குழந்தை ஆசையால் குடும்பத்தின் ஆணி வேரையே கிள்ளி எறிந்து விட்டாளே! நான் இல்லாத நேரத்தில் வீட்டில் ஏதாவது தப்பு நடந்திருக்குமோ? சேச்சே! பல ஆண்டு காலம் என் ரத்தத்தோடு ரத்தமாகப் பழகியவள் அப்படி நடந்திருக்கவே மாட்டாள்.' கலங்கிய குட்டையில் பூச்சி, புழுக்கள் மிதப்பதைப் போல அவன் உள் ளத்தில் பல சந்தேகங்கள் அணிவகுத்துத் தலை தூக்கின. -- கண்ணப்பன் உள்ளத்தில் மனப்போராட்டம் வலுத்தது. - கொரியனின் மனைவி உத்தமி; மகாலெட்சுமி. அவளுக்கு அவன் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும். தனக் குப்பிள்ளை பிறக்காது என்றதும் அவள் தன்னையே மாய்த்துக் கொண்டாள். . . . - ஆனல் இவள்? சுத்தமான சுயநலக்காரி. தனக்குப்பிள்ளை வேண்டும் என்பதற்காக என் உயிரையே வாங்க எண்ணிவிட்டாள். ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய முடியாது என்பதால்தான் வீட்டை விட்டுப்போக வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிருள்.' - பெண்கள் மிகவும் மோசமானவர்கள். அதிலும் ஏமாற்றமடைந்த பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அற்ப ஆசைக்காக அரசாங்கத்தையே கவிழ்ப்பவர்கள் என்ப" தால்தான் முனிவர்களே அவர்களைச் சாடியிருக்கிருர்கள்’’ - இப்படி கிறுகிறுத்துப் போனன் கண்ணப்பன். அப்போது அவன் கொச்சி நண்பன் சசிகுமார் உள்ளே நுழைந்தான்.' - - சிசிகுமார், சண்ணப்பனுக்குக் கிடைத்த கொச்சி நண்பன், அவன், ஒரு தமிழ் பெண்ணுக்கும் ஒரு. மலையாளிக்கும் பிறந்தவன். அவனுடைய தந்தை தமிழ் நாட்டில் அதிகாரியாக இருந்தபோது அங்கேயே ஒரு பேராசிரியையைத் திருமணம் செய்துகொண்டார். அவர்து சொந்த ஊர் எர்ணுகுளம். பதவிக் காலம் முடிந்ததும் அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். - சசிகுமாருக்குத் தமிழும் தெரியும், மலையாள மும் தெரியும். அவ்னும் கெர்ச்சித்துறைமுகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணப்பனின் தமிழ்ப்பற்று