பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35

யிருந்தால் போதும் - என்று கிண்டலாக ஊரில் பேசிக் கொள்வது இரவு முழுதும் என் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் நீங்கள் முன் கடிதத்தைப் பார்த்து என்ன நினைப்பீர்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. பிள்ளை இல்லை என்பதற்காக மூத்தவனான என்னை அவமானப்படுத்தினார்களே. இனி அவர்களைத் தலை குணிய வைத்தே தீருவேன் என்று எக்காளமாக எண்ணிக் குதூகலித்துக் கொள்வீர்கள். இந்த வதந்தி, புரளி எல்லாம் உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். பெண்களின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் ஏன் நடந்தன என்று எண்ணிவிடத் தோன்றுகிறது; ஆனால் ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதா என்று நினைத்துவிடவும் நேரிடுகிறது!

இப்போது உங்கள் பெற்றோரும் என் பெற்றோரும் உங்களின் கடிதத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். திருமணத்தை நிச்சயித்துவிட்ட வீட்டைப்போல் இங்கே ஒரே அமர்க்களமாக இருக்கிறது. நான் வடிக்கும் கண்ணீரை இங்கே இருப்பவர்கள் ஆனந்தக்கண்ணீர் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெண்ணுடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு கட்டம் வந்திருக்கவே முடியாது. உலகத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டு கனவு காண்பார்கள்; நான் நடந்துகொண்டும், பேசிக் கொண்டும் ஊமைக்கனவு கண்டுகொண்டிருக்கிறேன். அந்தக் கனவைக் கலைக்க வேண்டியது, அல்லது எனக்கு சுயநினைவை ஊட்ட வேண்டியது என்றும் போல் உங்கள் பொறுப்புத்தான்; வழக்கமாக நான் யாரிடம் வரம் கேட்டு நிற்பேனோ அந்தத் தெய்வத்திடம்தான் இப்போதும் வரன் கேட்டு நிற்கிறேன்.

என்றும் தங்கள்
கண்ணுத்தாள்

’’,

-என்று குறிப்பிட்டிருந்தது.

கடிதத்தைப் படித்து முடிக்கு முன்பே, அவன் முகம் வியர்த்து விட்டது. உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. கோபத்தில் தெய்வத்தை இகழ்ந்து விட்ட பக்தனைப் போல் தலையில் அடித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் வாழ்பவன்கூட தன்னைத் துன்பம் தாக்கும் போது தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்த தெருவுக்கே கேட்கும்படி அலறி விடுகிறான். அதிலும் கோழை மனம் படைத்த செல்லப் பிள்ளைகளின் உள்ளம் இம்மாதிரி நேரங்களில் உடைந்து நொறுங்கி பின்னிக்கிடக்கும் முருக்கைப் போல கலகலத்து விடுகின்றன. சற்று முன்பு சண்டாளியாத் தெரிந்த கண்ணாத்தாள் இப்போது கண்ணப்பனுக்குத் தேவதையாகத் தெரிந்தாள்.