பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 'இரண்டாயிரத்திற்குக் குறையக் கூடாது. கட்அண்ட் ரைட்டாப் பேசிடணும். முந்தி ஒருத்திய்ைக்' கொடுத்தோம். நானூறு ரூபாய் தான் கொடுத்தான். ஆனல் அவன் இரண்டே நாளிலே அந்தத் தொகையை எடுத்துட்டான். அந்த பாய் இருக்கானே அவன் ஒரு மலை விழுங்கி பத்து வருஷமா நாம் இப்படியே தான் இருக் கோம். அவன் லாரி வாங்கிட்டான். வீடுகட்டிட்டான். திருநெல்வ்ேலியிலே இன்னக்கி அவன் ஒரு பெரிய புள்ளி யாம். நகரசபைத் தேர்தலுக்கும் நிக்கப் போருனும். பாய், கொடுத்து வச்சிவன்; இன்னக்கி ஒரு கிைப்ட்ாத ராஜா கிடைக்கும்னு அவன் சொப்பனம் கூடக்கண்டிருக்க மாட் டான். ' - - இந்தப் பேச்சு சுபத்ராவுக்கு மதிமயக்கத்தை அதிகரிக்கச் செய்து விட்டது. அவள் நினைவை இழந் தாள. - w பொழுது புலர்வதற்குள் டாக்சி திருநெல் வேலி வந்து விட்டது. கிழக்கு வெளுக்கப்போகும் நேரம். டாக்சி, நகரில் பல தெருக்களைத் தாண்டி இடுக் கும், முடுக்கும் நிறைந்த ஒரு பகுதிக்குள் வந்து விட்ட்து. வாழ்க! ஆகா, பிரமாதம்!” என்று வரவேற்புக் கொடுத்தான் ராசாக்கிளி ராவுத்தர். குடித்த வனைப் போல் பேசினன், ஆனால் அவன் குடிக்கமாட்டான். அப்படி அவனுக்கு ஒரு பேச்சுப் பழக்கம். - ராசாக்கிளி ஒரு விநோதமான தோற்ற م.. , * முடையவன். ஒரு அழுக்குப்பிடித்த கைலி: மேலே ஒரு முண்டா பனியன், இடுப்பிலே பச்சை பெல்ட்: டக் டக் என்று பயங்கரமான ஒசைதரும் பூட்'சுகள் காலில்: இளம் தாடி, ஆளுல் மீசை இல்லை. பெண் குரலுக்கு எதிரான எருமைக் குரல். சிங்கத்தை அடக்கும் சர்க்கஸ்காரனைப் போல் நடவடிக்கைகள், சுபத்ராவைப் பார்த்ததும், நன்முகப் பழக்க மான பெண்ணுடன் பேசுவதைப் போல் அ வ் &ள கனிவோடு உள்ளே அழைத்துக் கொண்டு போனன். லாயத்திற்குள் நுழைய இடக்கு செய்யும் புதிய குதிரையைப் போல சுபத்ரா திமிறிஞள். இரவெல்லாம் அழுது அழுது அவள் கண்கள் பாழடைந்து கிடந்தன. மழைபெய்து 巒 ஏரிக்கரையைப்ப்ோல அவள் கன்னங்களில் கறைக் காடுகள் காய்ந்து தெரிந்தன. - ஒருவன் காபி கொண்டு வந்து கொடுத்தான். சுபத்ரா அதைத் தொட்டுக்கூடப் பார்க்க வில்லை. இன்னெரு