பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

“ஏண்டி இதுகூடவா ஒனக்குப் புரியல்லே? இவ்வளவு நாளாப் பொறக்காத புள்ளே இப்ப மட்டும் எப்படிப் பொறந்ததாம்! இப்ப புரியுதா விஷயம்? ” “எனக்கு ஒண்ணும் புரியாமெ இல்லை; அதை என் வாயாலே சொல்லக்கூடாதேனு யோசிச்சேன்”

“அதெல்லாம் அவுங்க வீட்டுக்குள்ளே பண்ணிக் கிட்ட ஏற்பாடு!”

இந்தக் கிசுகிசுப்பெல்லாம் கண்ணப்பனுக்கும் தெரியாமல் இல்லை.

குழந்தையின் மூக்கு, விழிகள், கன்னத்திலே கிடந்த மச்சம் எல்லாமே சொக்கநாதனின் அச்சாகத்தான் இருந்தது.

கலைத்துவிட்ட தேன் கூட்டைப் போல் கண்ணப்பனின் உள்ளம் இதனால் கலவரமடைந்தது.

மூன்று மாதம் கழித்து குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு டாக்டர் கொரியனைப் பிரதம விருந்தாளியாகக் கலந்துகொள்ளும்படி கண்ணப்பன் கேட்டிருந்தான்.

அழைப்பை ஏற்றுக்கொண்டு டாக்டரும் வந்திருந்தார். சொக்கநாதனும் வந்திருந்தார்.

விழா இனிதாக முடிந்தது. டாக்டர் விடை பெற்றுப் போகும்போது,

“கண்ணப்பா, இங்கே வந்த பிறகுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது.”

“நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதை நான் யூகிக்காமல் இல்லை டாக்டர்!”

“உன் தம்பியைப் பார்த்த பின்னர் தான், கண்ணாத்தாளின் மடியில் தவழும் குழந்தை சொக்கநாதனுக்குப் பிறந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன்.”

“அது எப்படி உனக்குத் தெரிந்தது?”

“சுபத்ரா என்னிடம் அட்மிட் ஆகும் போது கொண்டு வந்த அவர்கள் கல்யாணப்படத்தில் இவர்தான் இருக்கிறார்” என்றார்.

கண்ணப்பன் கண்கள் கலங்கின. அப்போது கண்ணாத்தாள் உன் வீட்டில் குழந்தையைத் தொட்டிலில், போட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.