பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உண்மை அதுதானே மிஸ்டர் ஞானசீலன்? அதிருக்கட்டும். ஒரு திருத்தம். நான் இப்போ டாக்டர் ரேவதி. இல்லை; இப்ப நீங்க என்னைத் தேடி வந்திருக்கிறது. என்கிட்டே வைத்தியம் பண்ணிக்க இல்லையே?-பின்னே, இப்ப எப்படி நான் டாக்டர் ரேவதியாக இருக்க வாய்க்கும்? திருப்பியும் சொல்றேனுங்க. நான் ரேவதி. ஞானசீலன்!... ரேவதி ஞானசீலன், நான்!”

ஞானசீலன் நல்ல பாம்பின் சீற்றத்தோடு அட்டகாசமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் சிரித்த வாறு ஆணவமாக எழுந்து நடந்தார்.

காலில் இடறிய கைத்துப்பாக்கியை எற்றிவிட்டார். மேஜையில் கைகளை ஊன்றினார். கரணம் போடவா?

சாய்ந்தபடி, மேஜையிலே தென்பட்ட அந்தத் திருமணப்படம், மங்கலத்தாலி, பழுப்பேறிய கடிதங்கள், டைரி, புதியசேலை, இரவிக்கை ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டு, தொடர்ந்த சிரிப்பை நிறுத்தாமல் தொடரலானார்; மிஸ் ரேவதி, நீங்கள் பகல் கனவு காணுறிங்க.’’ -

ரேவதி நல்லதொரு வீணை செய்து மடியில் கிடத்திய வண்ணம், வண்ணம் நிரம்பின நரம்புகளில் ஆனந்த பைரவி ராகத்தை சங்கீத ரசனையுடன் மீட்டிப் பரவசத் தோடு ஆனந்தமாக அனுபவித்து மெய்ம்மறந்திருக் கையில், ஞானசீலனின் நையாண்டிப் பேச்சு காதுகளில் விழவே, தவித்துப்போய்க் கண்களை உருட்டி விழித்தாள். ‘அட பரிதாபமே! நான் காண்றது. ராத்திரிக் கனவுங்க!” என்று சலனம் துளியுமின்றிச் சொன்னாள்.

இதைக் கேட்டதும், ஞானசீலன் பற்றறுத்துப் புன்னகை செய்தார். ஜோக் அடிக்கிறதை நீங்கள் இன்னம்கூட மறக்கல்லையா?” என்று கேள்வி கேட்டார். இத்தனை காலமும் ஜோக் அடிக்கிறதை அறவே மறந்துதான் போயிருந்தேன்; ஆனால், இப்ப உங்களைக்