பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ix

டாக்டர் ரேவதியின் சொந்த உரிமையாக்கும் இது!... இந்த உரிமைக்கு, உயிரால் உறவு சொல்லத் தெரிந்த, உறவு காட்டத் துணிந்த, அசலான உண்மை மனிதர் ஒருவர் கிடைத்தால்தான் எனக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும்!-இதுவேதான் சத்தியமான, தர்மமான, உண்மையான என் முடிவு ஆகும்! ஏன், தெரியுமா? எனக்கு நான்தான் விதி! அந்த விதிதான் டாக்டர் ரேவதி நான் விதியின் நாயகியாக்கும்!’ அவள் சுயப் பிரக்ஞையை மீட்டுக் கொள்கிறாள்.

விடிகிறது, பொழுது; அது ஊர்கிறது; தவழ்கிறது; நடக்கிறது; ஓடுகிறது.

செயலாளர் செயலிழந்து வருகிறார். “டாக்டரம்மா! நீங்க நடத்தப் போற மாப்பிள்ளைப் போட்டிக்காக மணி ஐந்தாகியும் பொறுமையோட காத்துக்கினு இருந்தாங்க அந்த எட்டுப் பேரும். அந்நேரம் பார்த்து யாரோ சிதம்பரம்னு ஒருத்தர் வந்து அவங்களோட காதிலே என்னமோ சிதம்பர ரகசியத்தை ஓதினார். என்னமோ ‘எச்சில் பழம், எச்சில் பழம்’ என்கிற வார்த்தைங்க மட்டிலுந்தான் எனக்குக் கேட்டுச்சுங்க. டாக்டர் அம்மா! அவ்வளவுதான்; மறு நிமிஷம், வந்தவங்க எட்டுப் பேரும் பேய் பிசாசைக் கண்டதாட்டம் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடிப் போயிட்டாங்களே!” என்றார்.

அவள் சிரிக்கிறாள்!-விதி சிரிக்கவில்லை; டாக்டர் ரேவதியேதான் சிரிக்கிறாள்! சிரித்துக் கொண்டே தன்னுடைய அந்தரங்கமான அறைக்கு அந்தரங்க சுத்தியுடன் ஓடுகிறாள். தாழ் இடுகிறாள். அன்புக்கு அடைக்குந்தாழ் வேண்டியதில்லைதான்! அறைக்கு - தனி அறைக்கு-தனிப் பெண் ஒருத்தியின் அந்தரங்க அறைக்கு அடைக்குந்தாழ் வேண்டும்தானே? அவளுடைய பெண் மனம் என்னவெல்லாமோ நினைக்கிறது; அவளது பெண்மையின் மனச்சாட்சி என்னென்னவோ எண்ணுகிறது! மனச்சுமை இறங்க வேண்டாமோ? ‘ராயல் சாலஞ்ச்’ துணை வருகிறது!-புதுமைப் பெண்ணான டாக்டர் ரேவதி, புரட்சிப் பெண்ணும் அல்லவா?

ஓ!...ஆமாம்!

ஆகவேதான், அவளே அவளுக்கு விதியாகி, அவளே அவளுடைய விதியும் ஆகி, தன் வழியே-தன்னுடைய