பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


“ரேவதி ஞானசீலன்! ... டாக்டர் ரேவதி ஞானசீலன்!”

வீரிட்டு அலறிக் கதறியவராகப் பொறி கலங்கிப் பாய்ந்து வந்த ஞானசீலன், அவளது கைகளை- அவளுடைய ரேவதியின் கைகளை கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்.

துப்பாக்கி தரையைச் சரண் அடைந்தது!

ஞானசீலன் கண்ணீரைப் பெருக்கி விம்மினார்.“என் அன்பான ரேவதி ஞானசீலன்!... உன் ஆசை அத்தானுக்கு நீ வாழ்த்தின மாதிரி நிச்சயமா நூறு வயசு தானாக்கும்! ”

மார்பகச் சேலை நழுவியதையும் உணராமல், வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறாள், ரேவதி! “ஆகா...நான் ரேவதி ஞானசீலன் ஆகிட்டேன்!...இந்த நல்ல நேரத்தைக் கொண்டாட, நான் உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேணாமா? அங்கே பாருங்களேன், அத்தான். உங்களுக்குப் பிடித்தமான ‘ராயல் சாலஞ்ச்’ உங்களைக் கண்சிமிட்டி வரவேற்குதுங்க...ஊம்; முதலிலே நீங்கள் ஆரம்பிங்க, ஒரு நொடியிலே நானும் வந்து உங்களுக்குக் கம்பெனி கொடுக்கிறேனுங்க!” என்று செருமினாள், ரேவதி ஞானசீலன். மண்ணிலே வானம் தெரிந்திருக்குமோ?

புதிய மலர்ச்சி கண்ட மோகத்தை உச்சிமோந்த ஞானசீலன், ‘ஒ கே’ சொல்லி, பூக்கோப்பையில் ஊற்றிய மதுவைப் பாதி சுவைத்து, மீதிப் பாதியைத் தர்ம நியதிப்படி ரேவதிக்கு வழங்க ரேவதியைத் தேடினார்.

ரேவதி ஞானசீலன் நேரமான நல்ல நேரத்திலே என்ன தேடுகிறாளாம்? ஆருயிர் ரேவதியைக் கைகளைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு நெஞ்சாகக் கட்டி அணைத்துக் கொண்டு எச்சில் மதுவை அவள் வாயில் சொட்டு சொட்டாக ஊற்றினார். ஆப்பிள் கன்னங்களிலும் கொவ்வைக் கனி உதடுகளிலும் மாறி மாறி---