பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


மார்புத்தாலி இரத்தச் சிலுவையென நிர்மலமாகத் தரிசனம் தந்தது.

ரேவதிக்கு ஆற்றாமை மேலிட்டிருக்க வேண்டும். ஒய்ந்து போய்விட்ட கைகளை உயர்த்த முயன்றாள். ஞானசீலனின் கண்ணிரைத் துடைக்கவா? முடியவில்லை.

ஒட்டிக் கிடந்த உயிரின் மூச்சைப் பிரயத்தனப்பட்டு உள்வசமாகத் தாங்கிக் கொண்டாள்; உதடுகளில் இரத்த வரிகள் கசிந்தன.

சத்தியமாகச் சொல்றேனுங்க, அத்தான்; இப்பத் தான் என் மனசு உண்மையிலேயே சமாதானப் பட்டுச்சுங்க!... இந்த அளவுக்காச்சும் எனக்கு ஆறுதல் கிடைச்சுதே! - அந்த மட்டுக்கும் நான் கொடுத்து வச்சவள்தான்! என்னைப் பாருங்களேன்; நான்

துளியானும் அழறேனா? என்னை மாதிரி நீங்களும் சமர்த்தாய் அழாமல் இருங்க அத்தான்! இந்த மகோன்னதமான நிம்மதியோட நான் புறப்பட்டாகணும். நான் மகா பாக்கியவதி. என்னை உயிராலும் உள்ளத் தாலும் ஆத்மார்த்தமாக நேசிச்ச புண்ணியவான் ஞானசீலனை நெஞ்சிலே சுமந்துக்கிட்டு, பூவோடும், பொட்டோடும் உங்ககிட்டேயிருந்து விடைபெறக் கொடுத்து வச்ச நான் புண்ணியவதிதான்.

‘பேச்சை நிறுத்திக் கொண்டதோடு நின்றிருக்கக் கூடாதா ரேவதி? முச்சும் நின்றுவிட்டதே!... தெய்வமே!... தாயே!...”

என்னோட கண் திறந்தப்ப, நீ கண்ணை மூடிக் கிட்டா எப்படி? இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காதே?... கண்ணைத் திற ரேவதி, கண்ணைத் திற!’

கண்கள் திறக்கவில்லை. ரேவதி ரோஷக்காரி!.

‘கண்ணே ரேவதி!... கோபப்பட்டுடாதே. கோவிச் சுக்கிடாதே!... அம்மோடி ரேவதி ஞானசீலன்... இந்த