பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


‘ஓ... நான் இப்ப இருக்கிறது புதுக்கோட்டை இல்லைதான்... நான் இப்பொழுது டாக்டர் ரேவதி!’-அவளுக்கு இப்போது ஐந்தாவது ‘டோஸ்’ காப்பி வேண்டும்!

உத்தரவின்றி உள்ளே நுழைந்தவள் கீதாவாகத்தான் இருக்க முடியும்! நிமிர்ந்தாள் ரேவதி: ‘அல்சர் பேஷண்ட்’ முத்தையன் காட்டுத்தனமாகக் கூச்சல் போடப் போக, கீதாவை வீணாக் கோவிச்சுக்கிட்டேன். பாவம்!

ஆவி பறந்த ‘நெஸ் கபே’ காப்பியை ரேவதியிடம் பணிவன்புடன் நீட்டினாள், நர்சு கீதா, ‘அம்மா’ வுக்குச் சூடுதான் பிடிக்கும்!

தம்ளரைக் கனிவுடன் வாங்கிக் கழுவி வைத்த பின் “இன்னம் ஒரே ஒரு கேஸ்தான் பாக்கி. இப்பவே அனுப்பிச்சிடட்டுமா?” என்று மெல்லக் கேட்டாள்.

“இதென்ன கேள்வி, கீதா? இப்பவே அனுப்பி வை!” ரேவதிக்கும் துல்லியமான அழகுடன் சிரிக்கத் தெரியும். ஒரு காலத்தில் அவளது இந்தச் சிரிப்புக்குத் தான் எவ்வளவு விலை மதிப்பு இருந்தது!

மருந்து அலமாரிக்கு மேலே கிடந்த அன்றைய செய்தித்தாள், கிராக்கியை இழந்து விட்ட ஆற்றாமையில் படபடத்தது.

ரேவதி கொண்டைப் பூப்பந்தைச் சரி பார்த்துக் கொண்டபின், பதக்கத்தைச் சோளிக்குள் திணித்துக் கொண்டாள். அவளையும் மீறிக் கொண்டு நெடுமூச்சொன்று திமிறியது.

நாற்பதிலும் வாலைக் குமரியாக ஒருத்தி தோன்றினாள்.

“வாங்கம்மா, வாங்க”.

“நல்லா இருக்கீகளா, ஆத்தா?”

பொதுவான வரவேற்புக் கொடுத்த பாவத்துக்குப் புதிதாக விசாரணையை நடத்துகிறார்களே இந்த ஆச்சியென்று ரேவதிக்கு உள்ளூற எரிச்சல் மூளத்தான்