பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

செய்தது. ‘வாடிக்கையாளர் பட்டியலிலே இந்த அம்மாள் இருந்தாலும் பரவாயில்லே; நறுக்குத் தறிச்ச மாதிரி ரெண்டு மூணு சொல் சொல்லி, ஆஸ்பத்திரியிலே தனிப்பட்ட உறவுக்கும் உரிமைக்கும் இடமில்லே என்கிறதைப் படிச்சுக் கொடுத்திடலாம். ஆத்தாவாம்... ஆத்தா!’

மூக்கின் நுனிக்கு வந்து விட்ட கோபத்திற்குச் சமாதானம் சொல்லிய பிறகு, நடுத்தர வயதில் மங்களமாக நின்ற செட்டி நாட்டைச் சார்ந்த-சேர்ந்த அந்த அம்மணியை மேலும் கீழுமாகக் கூர்மையோடு நோக்கினாள். தொடர்ந்து “என்ன உடம்புக்கு உங்களுக்கு?” என்று வலது கையால் கேட்டாள்.

நோய் சொல்லப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்டது.

டாக்டர் பேனாவை எடுத்தாள்! ‘இபொரல், பேரோஸெட்டின்...!’ மருந்துப் பெயர்கள் அணி வகுத்தன.

இதய நோயில், மூச்சடைப்பு ரகம் மிகப் பயங்கரமானதுதான்!

மருந்துச் சீட்டு கைமாறியது. ‘இ. சி. ஜி.’, ‘எக்ஸ்.ரே’ படங்களை எடுத்தாள், டாக்டர் ரேவதி; தன்னிடம் கைமாறிய ஆலோசனைக் கட்டணமான பத்து ரூபாயைப் பார்த்த கையோடு ஆச்சியையும் பார்வையிட்டாள். இந்த அம்மணிக்கு நடப்புக் கட்டண விவரம் கூடத் தெரிந்திருக்கிறதே?

ஆச்சியிடம் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய வேளை, எண்ணிக்கை விவரங்களை விளக்கினாள் பணிப்பெண் கீதா. பத்தியம் இல்லையாம்! ஆனால், பரங்கி, பூசணி, பாகற்காய் உதவாதாம்! .

கீதாவிடம் பொலிமாடு மாதிரி தலையை ‘தெரிகிறது’ என்கிற பாவனையில் இலாவகமாக ஆட்டிய மீனாட்சி, இப்போது ரேவதியை ஏதோ ஓர் உறவுடனும் உரிமையுடனும் நெருங்கினாள்; நெஞ்சுக் குழியில் தடவிக்