பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


சோளிக்கு இணை சேர்த்துக் கிளிப் பச்சையில் பிணை நின்ற ‘ஆர்கண்டி வாயல்’ சேலை நெகிழாமல், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, தனக்கே உரித்தான கருவத்துடனும் களிப்புடனும் துடுக்காகவும் மிடுக்காகவும் சாய்ந்திருந்தாள், டாக்டர் ரேவதி. மகப்பேறு நிபுணராகப் பொதுமக்கள் மத்தியில் பேர் பெற்றிருந்த பெருமையின் பெருமிதம், அவளது தோற்றப் பொலிவில், பளிச்சிட்டது.

கனவுகளுக்கும் காட்சிகளுக்கும் அப்பாற்பட்டவளாக, மனத்தை சமன் செய்து கொண்டு, கையில் பிரித்து விரித்திருந்த பேறு காலப் பிரச்சினை தொடர்பான புதிய ஆங்கில மருத்துவ ஆராய்ச்சி நூலை ஆர்வத்தோடும் அக்கறையோடும் வாசித்துக் கொண்டிருந்தாள். சங்கிலியின் பதக்கத்தோடு விளையாடிய விரல்களை திடு திப்பென்று உதறி, ‘பலே’ என்றாள். குரலில் உடன்பாடு தழுவிய ஓர் ஆமோதிப்பு இருந்தது. லண்டன் பேராசிரியர் டாக்டர் கிளேயர்ரெய்னர் தெரியப்படுத்திய ஆய்வுக் கருத்தின் வரிகளில் மறுபடி தமிழ் மனத்தைச் செலுத்தினாள். “நாடுகளிடையே நடந்த பெரும்பாலான மருத்துவக் கருத்தரங்குகளிலே பெரும்பான்மை பலம் பெற்ற கருத்து இது. அதாவது-கருவுற்ற மனைவி பேறு காலத்தை எட்டிக் கொண்டிருக்கிற கடைசி ஏழெட்டு வாரங்களிலேயே அவளது விருப்பத்துக்கு விரோதமாக கண்வன் அவளை உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவதோ, துன்புறுத்துவதோ தீவினையாக முடியக் கூடும்; இத்தகைய அசம்பாவிதம் காரணமாக, கருச் சிதைவு ஏற்படவும், அதன் தீய விளைவாக, மனைவியின் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் ஏதுவாகலாம்!

‘டக்’ என்று மூடினாள், நூலை. இதயத்தை என்னவோ செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது: மார்பின் இடது புறத்தில் இடக்கை விரல்களால் தடவிப் பார்த்தாள் மறுநொடியில் சலனம் கண்டிருந்த அவளது