பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


ரேவதி நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். இப்போது இதயத் துடிப்பு நிதானமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது! “நான் அவமானப் படுத்தப்பட்டு விட்டேனா?... ஏமாற்றப்பட்டு விட்டேனா நான்?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

“மிஸ்டர்...மிஸ்டர் ஞானசீலன்! ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க...? என்னை ஏமாற்றவா, அவமானப் படுத்தவா...? சொல்லுங்க; சொல்லுங்களேன். ஞானசீலன்!”

பதில் சொல்ல ஞானசீலன் எங்கே இருக்கிறார்? அவர்தான் நினைவு வந்தவுடன் நோய்ப் படுக்கையை மறந்தும் துறந்தும், சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டாரே!

தொட்டதற்கெல்லாம் காரண காரியம் இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டுப் பேயாக ஆட்டம் போட்டுத் தீர்க்கற பழைய புத்தி இன்னுமா மாறித் தொலைக்கவில்லை?-சே...! என்ன மனிதரோ!

ழகின் சிரிப்பு, கொச்சைப் படுத்தப்படாமலும் கொச்சைப் படுத்தப்பட்டாலும் தார்மிக நெறிமுறையோடு விளையாடிக் கொண்டிருந்த இயற்கையின் இதமான பின்னணியில் அமைதி காத்துக் கிடந்தது, ரேவதி இல்லம்.

செங்கதிர்கள் அள்ளி அணைத்து வழங்கிய முத்தங்களின் சூட்டைத் தாங்க மாட்டாமல், காற்று சீறிக் கொண்டிருக்கிறது, இன்னமும்.

சிறை வைத்திருந்த அதிர்ச்சியிலிருந்து இப்போது சிறுகச் சிறுக விடுதலை அடைந்து கொண்டிருந்தாள், ரேவதி. உலகியல் நடைமுறையில், இப்படியும் ஒரு சித்திர விசித்திர விடுதலையா, என்ன? - “நான் ஒண்ணும் கொக்கு இல்லே... ஆமாம்!”-நிர்த்தாட்சண்யமாகவே