பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


அவனது வீட்டுக்கு ரேவதி வந்து விட்டாள்! அவள் உடல் முழுக்க கம்பளிப் பூச்சி ஊர்ந்தது.

“வந்த காலோடு நிற்கப்படாதின்னு சொல்வாங்க; உட்கார்ந்து காபி சாப்பிடுங்க” வேண்டிக் கேட்டுக் கொண்டான் அவன்.

அவள் உட்கார்ந்து காபியை அருந்தினாள்.

கோப்பையை ‘டீபா’யில் வைத்தபடியே “நன்றி. உங்களுக்கு ஒரு நன்றி. உங்கள் காபிக்கு ஒரு நன்றி.” நயமான நாணத்துடனும் விநயமான புன்சிரிப்புடனும் அவள் நன்றி தெரிவித்தாள்.

மனம் கொள்ளாமல் சிரிப்பு வழியவே, வாய் கொள்ளாமல் சிரித்தான், ஞானசீலன். “உங்கள் நன்றி அறிவிப்பு பாணி ஏ. ஒன். மிஸ் ரேவதி!”

ரேவதி கருவக்களி துலங்கச் சிரித்தாள். “அதுதான் ரேவதி!... ஆமாங்க ஞானசீலன், நான் எப்போதும் எதிலும் ‘ஏ. ஒன்’ தான்! அதுதான் இந்த டாக்டர் ரேவதியின் தனிச் சிறப்பாகும்.”

ஞானசீலன் மீண்டும் சிரித்தான்.

“நான் புறப்பட்றேன்.”

“என்னை விட்டுட்டா?...”

சிமிக்கிகள் குலுங்கவும் மூக்குத்தி பளிச்சிடவும் தலையையும் மார்பையும் நிமிர்த்தி, ஞானசீலனை நேர் கொண்ட பார்வையைக் கொண்டு அளந்தாள். அந்தக் கேள்வியில் தொனித்த இனம் விளங்காத என்னவோ ஒரு சுகம் தனது மனதுக்கு ஆறுதலாக இருப்பது போலவும் அவள் உணர்ந்தாள்.

ஆறுதலில் பூத்த புன்னகை மலர் மணக்கத் தொடங்கி விட்டது. பழைய கோயில் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கவும் மறந்து விடவில்லை. அன்றைக்கு ஏற்பட்ட