பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


வந்தவங்க, உள்ளே வராமல் போனால், நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க; வாங்க” என்று அழைத்தாள்.

பூட்டுத் திறந்தது.

புதிதாகப் பிறந்த மகிழ்ச்சியில் அவனது அழகு கூடியிருந்தது. அவளைத் தொடர்ந்தான்.

எளிமையான முகப்புக் கூடத்தில் அவனுக்கு இடம் கொடுத்தாள், அவள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அடுப்பைப் பற்ற வைத்துக் காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் வெளியே போயிருக்கலாம் என்று நினைத்தான். அவனது மாளிகையிலும் அவனுடைய பெற்றோர் வெளியே போயிருந்தார்கள் அல்லவா?

ஞானசீலன் மெய்மறந்த நிலையில் காப்பியைக் குடித்து முடித்தான்.

அவசர அவசரமாக, “உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க, ஞானசீலன்” என்றாள் ரேவதி.

அவன் விவேகம் மாறாமல் சிரித்துக் கொண்டான். விடை பெற்றுப் புறப்பட்டான்.

கருங்குயில் ஒன்று ‘குக்கூ...கூ’ என்று. முழக்கமிட்டது.

டாக்டர் ரேவதி பதட்ட நிலையிலேயே, தன் நினைவை அடைய வேண்டியவள். ஆனாள். தொலைக் காட்சிப் பெட்டியை அழுத்திய பொழுது கெட்டி மேளம் கொட்டி முழங்கிக் கொண்டிருந்த மங்களமான இனிய ஓசையைக் கேட்டதும், இன்ப அதிர்ச்சி அடைந்தாள். “இப்ப எல்லாமே முடிஞ்சு போச்சு... ஆமா, முடிஞ்சுதான் போயிட்டுது!”