பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


சைகை காட்டினாள். தேடி வந்தது அது.

புரட்டினாள்.

ஞானசீலன் என்கிற பெயர் இப்போது மட்டும் அதில் எப்படி இடம் பெற்றிருக்க இயலும்? அந்தப் பெயரில் மருந்துக்கு என்றாவது ஒரேயொரு பெயராவது அச்சாகி இருக்கக் கூடாதோ? விநோதமான பெயர்தான், அது!

இப்போது எஸ். பி. சிதம்பரத்தைத் தேடினாள். தேடியது கிடைத்தது.

எண்களைச் சுற்றி விட்டாள்.

செட்டி நாட்டுக்குப் போய்விட்டாராம், மனிதர்!

காப்பி ஆவி பறக்க வந்தது.

சுவைத்துச் சுவைத்துப் பருகினாள். ஆவி உதடுகளில் வட்டம் சுழித்தது. ஆவியென்றால், இந்த ஆவிதான்!

ராவ் சூடு தாங்காமல் திண்டாடினார்.

ரேவதி இப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தாள். “உலகத்திலே யாரைத்தான் நம்புவதின்னே புரியலையே?... சிதம்பரம் சொன்னதாகச் சொல்லி, ஞானசீலனைப் பற்றி ராவ் தெரியப்படுத்தின சங்கதியெல்லாம் மெய்யாக இருக்குமா?... எனக்கென்னமோ மனசே ஒட்டக் காணோம்!... பெரிய லட்சாதிபதி வீட்டுப் பிள்ளை பத்து ஆண்டுக்குள் எல்லாத்தையும் தொலைத்திட முடியுமா, என்ன? ஞானசீலனைப் பற்றிய அந்தரங்கம் ஆதியோடந்தமாகச் சிதம்பரத்துக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?”

குடிபோதையோடு வாடகைக் காரில் பயணம் செய்த ஞானசீலன் மருத்துவமனை வாசலில் அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வைத்தியம் செய்யப்பட்டு, பிறகு தன்னினைவு வந்ததும், சொல்லாமல் கொள்ளாமல்