பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

அங்கிருந்து வெளியேறிய காரணமும் அவளுக்கு இன்னமும் புதிராகத்தான் தோன்றியது. -

“மெய்யாகவே இவருக்கு இப்ப வாடகைக் கார் பிரயாணம்தான் விதிச்சிருக்குமா?” நினைவு பளிச்சிட்ட கையோடு, ஒட்டுநர் கூறிய வேறொரு தாக்கலும் பிசிறு தட்டிற்று. “இவர் யாரோ மெக்கானிக்கை பார்க்கணும்னு சொன்னதாகத் தெரிவித்தாரே டிரைவர்? ஒரு வேளை, இவரோட புதுக்கார் செவர்லேயாயினும் மிஞ்சியிருந்து, அது ரிப்பேர் ஆகியிருக்கலாம்தானே? அம்மாடி... ஒரே குழப்பமாகப் போயிடுச்சே?... போதுமடி, ஆத்தா, போதும்!” நெற்றி ‘விண் விண்’ என்று தெறித்தது.

“நான் யார்? இவர் யார்?... எனக்கும் ஞானசீலனுக்கும் இருந்த சொந்தமும் பந்தமும் உறவு முறிஞ்சு, உரிமை துறந்து ஆண்டு பத்து ஓடிப் போயிட்டுதே! இனி என்ன?..”

இப்போது, சிறுகச் சிறுக நெஞ்சிலே அமைதியைச் சேகரம் செய்து கொள்ள முனைந்தாள்.

ஊகூம்!...

அந்தரங்கச் செயலாளருக்குக் குதிகால்களில் வலியெடுத்தது. அந்தரங்கத்தில் செயல்பட்ட சமாசாரம்.

“ராவ், காரை எடுத்திட்டு நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வந்திட்றேன். டிரைவர் சைக்கிளை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகட்டும். நீங்களும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். ‘மணமகன் தேவை’ன்னு நான் கொடுத்திருந்த விளம்பரத்தை ஆசையோட மதிச்சு விண்ணப்பம் அனுப்பியிருக்கிற மாப்பிள்ளைமார்களிலே கொஞ்சப் பேரை அநேகமாக நான் திரும்பினதும் தேர்வு பண்ணிப் பட்டியல் போட்டுத் தந்திடுவேன். அவங்களுக்கெல்லாம் இந்த முப்பது, முப்பத்தொண்ணிலே போட்டிக்கு