பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அழைத்துக் கடிதம் குடுங்க. என்ன சரிதானே? பேட்டி பிப்ரவரி நாலு!... ஆமாம்! நேரம், மாலை ஐந்து மணி!”

“உத்தரவுங்க!”

“ராவ், ஒரு சின்ன சந்தேகம்!”

“அம்மா...”

“நான் டாக்டர்!”

“ஆமாங்க, டாக்டரம்மா!”

“நீங்கள் இப்போ காட்டின மரியாதை மெய்யாவே உங்கள் மனசிலே இருந்து வந்தது தானே?”

“ஆமாங்க, நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டிங்கன்னா, என் குடும்பம் தவிச்சிப் போயிடுங்க!”

“மெய்யா?”

“மெய்தான்.”

“உங்கள் ஒப்பந்தம் பிப்ரவரி நாலாந்தேதி சாயந்தரம் அஞ்சு மணியோட முடிஞ்சிடுது. அது வரைக்குமாச்சும், நீங்கள் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, என்னிடம் நம்பிக்கையாய் நடந்துக்கிணு, நல்ல பேரோட இங்கேயிருந்து ‘டாடா’ வாங்கிக்கினு போவீங்கண்ணும் நான் நம்புகிறேன்.”

“உங்கள் நம்பிக்கை என் தரப்பில் சத்தியமாய் எவ்விதத் துரோகமும் விரோதமும் ஏற்படவே ஏற்படாதுங்க, டாக்டரம்மா! இந்த அம்பது நாளா உங்கள் உப்பைத் துண்ணுறவனாச்சுங்களே நான்?”

“சரி, இனி நீங்க உட்கார்ந்துக்கிடுங்க, ராவ்!...”

ராவ் சாமர்த்தியசாலி; அவசரப்பட்டு அவர் உட்கார்ந்து விடவில்லை.

“என் ஜாதகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”