பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

ஆண்டுகளாக 240 நாவல்களையும் மாலைமதி திங்கள் இதழாய், மாதமிருமுறையாய், வார இதழாய் நூற்றுக்கணக்கான நாவல்களையும் வெளியிட்டுள்ளது. மாத நாவல் என்னும் நோய் நாவல் இலக்கிய வளர்ச்சியை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ஆராயவேண்டிய காலம் இது.

குறுநாவல்களுக்குக் குறுநாவல்களின் வடிவம் சிதைந்தும் சீர்குலைந்தும் வருகிறது. எவ்வாறாயினும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில்-தமிழ் இலக்கிய வரலாற்றில்-நாவல் இலக்கியத்திற்கு ஒரு நல்ல இடமுண்டு.

முப்பது ஆண்டுகளாக பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் நல்ல பல நாவல்களை எழுதியுள்ளார்கள். பலநூறு சிறுகதைகளையும் படைத்தவர். முதற் காளாஞ்சி என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றவர். நாவலுக்காகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றவர். சிறுகதை, புதினம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, திறனாய்வு எனப் பல வடிவங்களிலும் நூல் படைத்தவர். உலகம் புகழும் அன்னை தெரசா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ஏலக்காய் பற்றி இவர் எழுதிய நூல் வேளாண்மைத் துறைக்குப் புதிய வரவாகும், நல்வரவும் ஆகும். ‘கல்கி முதல் அகிலன் வரை’ என்னும் நூல் திறனாய்வுத் துறைக்கு இவர்கள் அளித்த கொடை ஆகும். ‘அகிலன் முதல் சுஜாதா வரை’ என்னும் நூலிலும் சிவசங்கரி உள்ளிட்ட படைப்பிலக்கிய ஆசிரியர்கள் பற்றிச் சிறந்த முறையில் திறனாய்வு செய்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உமா இதழின் ஆசிரியராக அமைந்து சிறந்த இலக்கிய இதழை நடத்திய பெருமை இவர்களைச் சேரும். துறைதொறும் சிறந்து விளங்கும் தமிழ்ப் பெருமக்கள் பலரைப் பேட்டி கண்டு,