பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

பாண்டி பஜார் கடிகாரம் ஒன்று 9 மணி சொல்விற்று. பனகல் பூங்காவின் தெற்கு முடுக்கில் 'மாருதி’ நின்றது.

ரேவதிக்கு அதிர்ச்சி மாறவில்லை. ஞானகுனிய மாகத் தோற்றம் தந்த ஒரு முரடனுக்கு ஞானசீலன் என்பதாகப் பெயர் வாய்த்திருக்கிறது.

"அம்மாடி!... அங்கே போய் ஆளுக்கொரு டீ குடிப்போம் முதலில்’’ என்றாள்.

நாயர் கும்பிடு கொடுத்து வரவேற்க, அவள் கடையை நெருங்க, மீண்டும் அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

தாடியும் மீசையும் பூண்டவராக, முகத்தைத் திருப்பிக்கொண்டு சாரைப் பாம்பாகப் பாய்ந்து சென்றவர் மிஸ்டர்... மிஸ்டர். ஆமாம்; அவரே தான்! உயிர்ப்பகுதி ஏன் இப்படித் துடிக்க வேண்டும்?

குழலி சற்றுத் தொலைவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு, குழலி?’’

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் குடிச்ச சாயாவைப் பாதியிலேயே வச்சுப்போட்டு, திடுதிப்னு தலைபோற அவசரம் வந்ததாட்டம் கிடுகிடுன்னு பறந்திட்டாருங்கம்மா. பின்னாடியே ஒடிப்போய்க் கூப்பிட்டுப் பார்த்தேன் மனுஷன் திரும்பிக்கூடப் பார்க்காமலே மறைஞ்சிட்டாருங்க!”

ரேவதியின் மார்பில் எறும்பு கடித்தது. சுரீர் என்றது "யார் அவர்?"

“எனக்குத் தெரிஞ்சவர். உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. தாடியும் மீசையும் வச்சிருந்தார். கண்டுதானோ என்னவோ, பேய் பிசாசைக் கண்டராட்டம் அரண்டு மருண்டு ஓடிப் போயிட்டாருங்க.

அ.மோ-4