பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


ஒரு படம் எடுக்க வேணும்னு ஆசையாம்; கூடிய சீக்கிரத்திலேயே இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கப் போறாதாம்! காதல் ஒரு முறைதானே வரும்னு என்னைக் கேட்டார். எனக்குப் பதில் சொல்லத் தெரியல்லீங்க!... ஆமாங்க!" - மீண்டும் இடைவேளை விட்டாள், குழலி.

ரேவதி குறுக்கிட்டாள்: “காதல் ஒருமுறைதான் வரும்!”

"அம்மா!" என்று அழைத்தாள், குழலி. அவளுக்கு விழிப்பூட்டினாளோ? - தொடர்ந்தாள்; "அ ம் மா, உங்கள் தூக்கத்தைக் கெடுத்திட்டேன். தொடங்கிய கதையை முடிச்சிடறதுதான் நியாயம்! அண்ணனோட முதல் சம்சாரம் யார், என்ன என்கிற விவரத்தை நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படலாம்; அது நியாயமும் கூட! ஆனால், அந்த விவரத்தை நானும் அவர்கிட்டே கேட்கல்லே, அவரும் அதைப்பற்றிச் சொல்லல்லே!" குழலி பெருமூச்சு விட்டாள்.

ஒருவாட்டி, கு. டி. மயக்கத்திலே ‘கண்ணே மணியே’ன்னு வசனம் பேசி, என்னமோ ஒரு பெயரைச் சொல்விச் சொல்லி விம்மினாருங்க; படுக்கையிலே அவர் பக்கத்திலே, அவரோட முகூர்த்தப் படம் ஒண்ணும் கிடந்திச்சுங்க!... அந்தப் படத்தையும் நான் பார்க்க விரும்பலிங்க! - முறிஞ்சு போன ஓர் உன்னதமான உயிர் உறவுக்கு அந்தப் படமே சாட்சியாக அமைய லாயக்கில்லாமல் போயிட்டதுக்கப்புறம், அந்தப் படத்தைப் பார்த்து நான் சாட்சியாக ஆகிறதிலே யாருக்கு என்ன ஆதாயம் வந்திட முடியும்?”

நிறுத்தி, "எங்கள் ஞானசில அண்ணா அன்பாலே நல்லவர்; மனிதாபிமானத்திலேயும் மனித நேசத்திலேயும் அன்பானவர் இல்லாட்டி, என்றைக்கோ தாலி கட்டிக் கிட்ட மனைவி தன்னைத் தூக்கியெறிஞ்சுங்கூட, இன்றைக்கும் அந்தப் பெண்டாட்டிக்காகவும், அவள் பறி