பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கொடுத்த அவரோட குழந்தைக்காகவும் கண்ணீர் விட்டுக் கிட்டு இருப்பாருங்களா? சொல்லுங்கம்மா!"

குழலி மிகக் கூர்மையாக ரேவதியை ஊடுருவினாள்.

"மெய்தான்!...” என்றாள், ரேவதி. உயிரின் துடிப்பு அடங்கினால் தானே?

“அப்படின்னா? நீங்களும் என் கட்சிதான்!” என்று சோகம் இழைந்தோட நகைத் தாள், குழலி. அம்மா, தியேட்டரிலே நீங்கள் பேசிக்கினு இருந்த பொம்பளை கிட்டே ஜாக்கிரதையாக இரு க் கி ற து நல்லது. அவள் ஒரு சமூக வேசி! அண்ணன் குடிபோதையிலே உளருறதை வச்சுக்கிட்டு உங்களையும் 'ப்ளாக்மெயில்’ பண்ணப் பார்ப்பாள்! அப்புறம், வழியிலே உங்களை மடக்கின ரவுடியோட பசியை எத்தனையோ . தரம் எங்கள் அண்ணன்காரர் தீர்த்து வச்சிருக்காருங்க! மனிதன் மிருகமாகிறதுக்கு ஒரு நொடி போதாதுங்களா? ஒரு நொடியிலே மிருகமாகி, மறுநொடியில் மனிதனாகவும் ஆகி ஓடிப் போய்ட்டானே, அந்த ரவுடி...”

"என்னோட பாவத்தை கட்டிச் சுமக்காமல் போன வரையிலும் அந்த ஆளுக்குத்தான் லாபம்! இல்லேன்னா, இந்நேரம் நான் செத்த இடத்திலே புல் முளைச்சிருக்காதா?" என்றாள், ரேவதி.

"நல்லகாலம், ஒரு சமூக நஷ்டத்தையும் தவிர்த்திட்டான், அந்த ரவுடி!"

பிஸ்கட் மணக்கத் தொடங்குகிறது.

தாகசாந்திக்கு இப்போது தண்ணீர்க் கூஜாவால்தான் பதில் சொல்லக்கூடும்.

"அம்மா.”

"துக்கம் வந்தாச்சாம்மா?"

“துக்கம் போயாச்சுங்க!”

"அப்புறம்?"