பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


உங்களோட திருமணத்துக்கு என் அண்ணன் ஞானசீலனை அழைப்பீங்களா? அண்ணனுக்காக என் கையில் ஓர் அழைப்பிதழ் கொடுப்பீங்களா?”

ரேவதியின் நெற்றிப் பொட்டில் சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடித்தது யார்? ரேவதி துடித்தாள். விழி வழியே உள்மனம் வெளியே பிதுங்கியது.

"அம்மா, கேட்டேனே?’’

"ஒ...கொடுப்பேனே!”

"பலே, பலே...எங்கள் டாக்டர் தங்கம்னா தங்கம் தான்...சொக்கத் தங்கமேதான்!”

கைக்குழந்தைக்கு ஈடுகட்டிக் கள்ளங்கவடு இல்லாமல் வாய் நிரம்ப குதுகலத்தோடு சிரிக்கிறாள் குழலி.

ரேவதியின் உள்ளத்தின் உள்ளம் ஊமைத்தனமாக விம்மியது. "என்னோட தெய்வக் குழந்தை இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தானே வாய் கொள்ளாமல் சிரிக்கும்? அது செத்ததாலே தானே என் மனம் வெறுத்து, அவரையும் வெறுத்தேன்? அந்த மனிதர் அன்றைக்கு ஆத்திர வெறியோட ஈவிரக்கம் இல்லாமல் வாயும் வயிறுமாக இருந்த என்னைக் கீழே தள்ளி விடாமல் இருந்திருந்தால், அந்தக் குழந்தை பிழைச்சிருக்குமே? ஆண்டவனே! இனி நான் என்ன செய்வேன்...? இப்ப என்னை என்ன செய்யச் சொல்கிறாய்...??

பொங்கிய ரேவதி மெல்ல எழுந்து சென்று கண்ணீரைக் கழுவிக் கொண்டு வந்தாள்.

குழலிப் பெண்ணே உன்னோட வெள்ளைச் சிரிப்பிலே நான் குழந்தைத் தெய்வத்தைக் கண்டேன். ஆகவே, நீ என் குழந்தையாக வந்து எனக்கு ஒரு முத்தம்-ஒரே ஒரு முத்தம் கொடு. நான் உனக்குத் தாயாகி, நானும் உனக்கு முத்தம் கொடுத்திடறேன்...! ஊம்; வா...ஒடி வா, குழலி!” விம்மினாள் ரேவதி. பாசம் பரிமாறப்பட்டது.

அ. மோ-5