பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

குழலி பிரித்தாள்.

ரூபாய் நோட்டுகள் சிதறின.

குழவியின் கண்கள் பேசவில்லை; கண்ணீர் பேசியது. "சுளை சுளையாய் ஆயிரம் ரூபாய் இருக்குதுங்களே, அம்மா !”

“ உனக்குச் சம்பளம் ஐநூறு ரூபாய்தான் இப் போதைக்கு என்னாலே தர முடியும். உன் சாப்பாடு, மற்ற செலவுகள் எல்லாமே இனிமேல் என்னோடு’ நடந்திடும்! இந்தப் பணம் உனக்கு முன்பணம். நீ ஒருத்தியாவது நிம்மதியோட சிரிச்சிக்கிட்டு இருக்க வேணாமா, குழலி?" என்றாள் ரேவதி.

இப்போது குழலி அழுகிறாள் ஆனந்தமாக!

ரேவதி இல்லம் புதியதோர் உலகம் செய்திடத் தயாராகிக் கொண்டிருந்தது.

இப்போது-

இங்கே-

காலம் சுவரிலேதான் ஒடும்.

மணி: நான்கு, பதினைந்து.

விடியல் பொழுதில் ஏற்பட்ட மனச் சிலிர்ப்பு இப் பொழுது மேனியிலும் பரவத் தொடங்கி, கண்ணாமூச்சி விளையாடி இருளுக்கும் ஒளிக்கும் மத்தியில் அலை சய்ந்தது.

ஐந்து மணிக்கு இங்கே நடைபெற இருக்கிற நவீன சுயவரத்தில் ரேவதி சுழன்றாள்!

“என் மட்டிலே இன்னிக்கு ஒரு சோதனை நாளாட்டம் தான்; மணமகன் தேவை போட்டிக்காக வந்த சேர்ந்த 68 மனுக்களிலே நான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைகளும் இந்நேரம் வழியிலே வந்துக்கலாம். அவங்களிலே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்