பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


‘உன்னதமான ஒரு மாயத் தேவதை நீ என்கிறது தான் பொருத்தமான சங்கதி...! அதனால், மெய்யாவே பரிசுத்தமான என் நெஞ்சிலே இன்றைக்கு மட்டுமல்ல: என்றைக்குமே நீ ஒருத்தியேதான் எனக்கு அன்புத் துணைவியாகவும், “அருமைத் தேவதையாகவும் சத்தியமாகக் கொழு இருக்க முடியும்!...”-நெஞ்சத்திலே அளவிட்டுச் சொல்ல முடியாத நேசம் வழிந்தோட, கண்களிலே அளவு கட்டிச் சொல்லும் படியான தண்ணீர் பெருகி வழிய,

சாந்தி முகூர்த்த ராத்திரியில் சத்தியம் செய்த ஞானசீலனின் அன்பான் பேச்சு தர்மத்தின் குரலாகவும். சத்தியத்தின் ஆணையாகவும் அவளது பெண் மனத்தில் மீண்டும் ஒலித்திருக்க வேண்டும். தெய்வமே! இப் நான் என் செய்வேன்? அலறினாள் அவள். “மிஸ்.. ஞானசீலனோட சத்தியப் பேச்சை இவ்வளவு காலமும் நான் எப்படி மறந்தேன்?... ஆத்தாளே கருமா உண்மையாகவே நான் பாவி ஆகிவிட்டேன. ஐயையோ!... தெய்வமே... என் தெய்வமே!” கதரினாள், அவள். அவள் சாட்சாத் ரேவதி டாக்டர் ரேவதி

எங்கேயோ, சொறி நாய் ஒன்று ஊளையிடுகிறது. அவளுக்கு நெஞ்சு வலித்தது. மேஜை டிராயரை இழுத்தாள். மாத்திரைகளைத் தேடினாள். ஆனால், கைகளில் ஏதோ காகிதங்கள்தாம் சிக்கின. எடுத்தாள். மணமகன் போட்டியில் பங்குபெற வந்த சிதம்பரத்தின் ‘மனு அது.

கட்டின மனைவி கோயில் கல்லாக இருக்க, இது என்ன விளையாட்டு: அன்றைக்கே இம்மனுவை நிராகரித்து விட்டாள். இன்னொன்று வயிற்றுவலி முத்தையனுடையது, ஆற்றது, கிழக்கட்டை ஒன்றுக்குச் சொந்தம்!-சே! ஆயினம் காலத்துப் பயிரான