பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


"அம்மா, நான்தான் அங்கம்மா!"

“நான் உன்னைக் கூப்பிட்டேனா?”

"இல்லீங்களே! ராவ் ஐயாதான் அனுப்பிச்சு வச்சாருங்க. உங்கள் கல்யாணப் பேட்டிக்காகப் பெரிய பெரிய ஐயாமாருங்களெல்லாம் கச்சிதமா வந்து சேர்ந்திட்டாங்களாம்! சொல்லிட்டு வந்திடச் சொன்னாங்கம்மா!"

"நான் இப்போ யாரையுமே பார்க்கப் போறது. கிடையாது; நீ போகலாம்!”

மறுபடி சத்தம்...

"யார்? - குழலியா?’’

"அம்மா, நான்தான் ராவ்.’’

"என்ன வாம்?"

"வந்துங்க..."

"அதான் வந்திட்டீங்களே!...”

"நீங்கள் நடத்தப் போற பேட்டிக்கு மணி அஞ்சாகியும் பொறுமையோட காத்துக்கினுதான் இருந்தாங்க அந்த எட்டுப் பேரும் அந்நேரத்திலே, சிதம்பரம் வந்து, அவங்களோட காதிலே என்னமோ இரகசியத்தை ஒதினார். என்னவோ எச்சில் பழம், எச்சில் பழம்’ என்கிற வார்த்தைங்க மட்டிலுந்தான் எனக்குக் கேட்டிச்சு. அவ்வளவுதான்; வந்தவங்க அத்தனை பேரும் பேய் பிசாசைக் கண்டதாட்டம் விழுந்தடிச்சிட்டு ஓடிப் போயிட்டாங்களே, அம்மா. இப்ப நான் என்ன செய்யட்டும்?’’

அஞ்சி ஒடுங்கினார், ராவ்.

“நீங்கள் ஒண்னும் செய்ய வேண்டியதில்லே. பழம் நழுவிப் பாலிலே விழுந்தாச்சு; அதுபோதும் எனக்கு! சரி; இந்தாங்க, உங்களுக்குச் சேரவேண்டிய சம்பளப் பணம்!

ராவ், இனி நீங்கள் நேரா உங்க வீட்டுக்கே புறப் பட்டுடலாம். சீக்கிரம் புறப்படுங்க... குட் பை!"