பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அவள் விழித்திருந்தாள்


பஸ்ஸில் புறப்பட்டாள். கொஞ்சம், கொஞ்சமாக திருநீர்மலையின் தோற்றம், கோயில் எல்லாம் பின் தங்கின.

அடுத்து ஒரு ஊரில் பஸ் நின்றபோது பட்டப்பா அவளுக்கு ஆசையாக ஒரு பந்து மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தான். பான்ட்டா உடைத்து எடுத்து வந்தான். பழம் வேண்டுமா என்று கேட்டான்.

அவள் எதிர்பார்த்தது வேறு. அவனிடம் ஒரு நெருக்கம். ஒரு ஆவலானபார்வை. குறைந்தபட்சம் மேலே ஒட்டியாவது உட்காருவான் என்கிற எதிர்பார்ப்பு. ஊஹூம்...

பஸ்ஸின் ஆட்டத்தில் பட்டப்பா தூங்கி வழிந்தான். அந்த சமயங்களில் அவன் தலை லேசாக அவள் தோளின் மீதும், கன்னங்களின் மீதும் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்தது. அவள் சிலிர்த்துப்போனாள். அவன் சட்டென்று விழித்தபோது அவளைப்பார்த்து அசடு வழியச் சிரித்தான். ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்ட குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டான்.

ஒரு பெண்ணின் இயல்போடு கூடிய ஆண்மகனாக அவன் இருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

எதிர் பெஞ்சில் இருந்த அந்த நடுத்தரவயதுத்தம்பதிகள், அவர்களின் பேச்சு, பார்வை பறிமாறல், நெருக்கம், கம்பீரமான அவன் தோற்றம், வலுவான அந்தக்கரங்கள், தீட்சண்மான பார்வை

நர்மதாவின் கழுத்தில் இருந்த அத்தனை நகைகளும், உடலைச்சுற்றிக் கொண்டிருந்த பட்டுப்புடவையும் சுமையாக இருந்தது.

ஆயிற்று, ஊர் வந்தது. ஊருக்குப்பெயர் என்ன வைத்து வாழுகிறது? ஏதோ ஒரு ஊர். தெருவே அவளையும், அவனேயும் வேடிக்கை பார்த்தது. "பட்டப்பா பெண்டாட்டியைப் பாருடி... ராஜாத்தியாட்டம் இருக்கா. இதுக்குப்போய் இப்படி ஒருத்திவந்து வாச்சிருக்குப்பாரு...'அவர்கள் உரக்கப் பேசாவிட்டாலும் கிசு கிசு வென்று பேசிக்கொண்டார்கள்.

பட்டப்பாவின் அக்கா விதவை. பக்கத்து வீட்டுப்பூரணி வாய் கொள்ளாச்சிரிப்புடன் தட்டுநிறைய ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்தாள். வாசலில் பெரிசாகப் படிக்கோலம்போட்டு, செம்மண் இட்டிருந்தது. குலையோடு வாழை