பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

11

ஒரு தடவை வெங்குலட்சுமி தலையில் மடேர் மடேர் என்று போட்டுக் கொண்டு ஊமை அழுகையாக அழுதாள்.

“பாவிப்பெண்ணே! உடம்பும், நீயும் செதுக்கின பொம்மை மாதிரி இருக்கியே. அதைப்பாத்துட்டு அவன் இளிச்சிண்டு இளிச்சிண்டு வராண்டி. ஏமாந்துடாதேடி சினிமாவும் வேண்டாம். இனிமே அவன் பாஸ் குடுத்து நீ போனே...”

நர்மதா பயத்துடன் தாயைப் பார்த்தாள்.

“நான் ஒரு முழம் கயித்துலே தொங்கிடுவேன்-” என்று முடித்தாள் வெங்குலட்சுமி.

“இதெல்லாம் என்னம்மா அமர்க்களம்? சினிமாவுக்குப் போனால் என்னவாம்?” என்றான் நர்மதாவின் அண்ணா கிச்சாமி.

“போவேடா! நீ ஒலகத்தாரைப்போல கல்யாணம் கார்த்தீன்னு பண்ணின்டு போறே. இவளுக்கு ஒரு வழி பொறக்க வாண்டாமா”

தங்கையின் அழகை முதலாக வைத்து கிச்சாமியும், அவன் மனைவியும் தங்கள் சினிமா அபிலாஷைகளை பூர்த்தி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனல், கிச்சாமி சாயிராமின் பர்ஸில்சினிமா பார்க்க முடியவில்லையே என்று வருந்தவில்லை. எப்படியோ அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

வெங்குலட்சுமி எங்கேயோ ஷேத்ராடனம் கிளம்பிப்போனாள். பத்து நாளைக்கு ஹாய்யா பகவத் தரிசனம் பண்ணிண்டு “இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பிடா” என்று கடவுளை வேண்டிக்கொள்ளக் கிளம்பிவிட்டாள்.

திரும்பி வரும்போதுதான் கங்கம்மாவை ரயிலில் சந்தித்தாள். முதலில் அவள்தான் என்பதே சந்தேகமாக இருந்த்து. ஒடிசலாய் இருந்தவள் சதை போட்டிருந்தாள். விதவைக் கோலம் வேறு. பட்டுச்சுங்கடிப் புடவை, நவரத்தினமாலை, புதையப் புதைய தங்க வளையல்கள் என்று அம்ர்க்களமாக இருந்தாள் கங்கம்மா. “நீங்க எந்த மட்டும்?” என்று கேட்டாள் கங்கம்மா. குரலும் கங்கம்மா குரல்தான்; ஒரு மாதிரி ‘கீச் கீச்’ சென்று

“நீங்க... கங்கம்மா இல்லே?”

“ஆமாம். நீ வெங்குதானே? அப்பவே நெனச்சேன். இந்த