உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அவள் விழித்திருந்தாள்

“ஏதுடி இவ்வளவு பூ?”

“பக்கத்து வீட்டு மாமா வாங்கிக்கொடுத்தார்”

“அவர் ஏண்டி உனக்கு பூ வாங்கித்தரனும்? அப்படியெல்லாம் வாங்கப்படாதுடி...”

“வாங்கிண்டா என்ன? அவர் ஆசையா வாங்கிண்டு வந்து குடுக்கறார். மாமிக்கு சொல்லாதே, என்னைக்கொன்னுபுடுவாங்கறார். நான் ஏன்சொல்லப்போறேன் மாமான்னுட்டேன். நீதான் ஒரு முழம் பூ வாங்கி எனக்கும் மன்னிக்கும் கிள்ளிக் குடுக்கிறியே” தலை நிறைய பூ வைத்துக்கொள்ளும் ஆசையில் இந்தப்பாவிப் பொண் ஏமாந்துட்டு நிக்கப்போறதோ" என்று எத்தனை நாளைக்கு மருக முடியும்?

கங்கம்மா கூடையிலிருந்து பழங்களை எடுத்து வைத்தாள். தம்பி வாங்கி வந்த பொட்டலங்களைப்பிரித்தாள்.

“என்ன வெங்கு! ரயில்லே ஒண்ணும் சாப்பிடமாட்டியா? மடி ஆசாரமெல்லாம் வச்சுண்டு இருக்கியா?”

“சே.சே... அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி.”

“அப்ப சாப்பிடு...”

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். மெதுவாக வெங்கு லட்சுமியே பேச ஆரம்பித்தாள்.

நர்மதா ஒருத்திதான் தனக்குப் பாரமாக இருப்பதாகச் சொன்னாள். பெண்ணின் அழகைப்பற்றி வர்ணித்தாள். அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்து விட்டால் வேறு எதுவும் தனக்குத்தேவையில்லை என்று பேசினாள்.

பட்டப்பா அவசர அவசரமாகத்தின்று விட்டு காப்பியைக் குடித்தான், அழகான பெண் என்று காதில் விழுந்ததும் அக்காவையும், வெங்குலட்சுமியையும் மாறிமாறிப் பார்த்தான்.

ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாகவும் கங்கம்மா சொன்னாள்.

பெண் பார்க்க வந்த அன்றே கங்கம்மா தன் பணப்பெருமையை பறைசாற்றிக்கொண்டாள். தட்டு தட்டாகப் பழமும் புஷ்பமும், உயர்தரமான ரவிக்கைத் துண்டும், எட்டு