22
அவள் விழித்திருந்தாள்
தோற்றம். வெள்ளிக்குத்து விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இருந்தாள்.
“இந்தப் படம் என் புருஷன் திருப்பதியிலேருந்து வாங்கிண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஒரு புள்ளை வேணும்னு ரொம்ப அசை. ஆனா, என்னவோ அவருக்கு சபல புத்தியே இல்லை. நான் ஆசை ஆசையாய் காத்திருந்த நாட்களில் அவர் ஏகாதேசி, அமாவாசை என்று சொல்லிண்டு வாசல் திண்ணைக்குப் போயிண்டிருந்தார். நான் அலுப்போடு இருந்தப்ப அவர் ஆசையோடிருந்தார், என்னவோ பொறக்கலை. பொறி இருந்தாத்தான் பிள்ளை பிறக்கும். எத்தனை வயசானாலும் விடாது. எப்படியோ உன் வயத்துலே நாலு பொறந்தாச்சரி. நீ பிரசவத்துக்கு உங்க வீட்டுக்குப்போக வேண்டாம். நான் செய்யறேண்டி”
நர்மதா வேதனையுடன் கங்கம்மாவைப் பார்த்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டு மிகுந்த பரவசத்துடன் சுவாமியின் எதிரில் நின்றிருந்தாள். பகவானே எப்படியும் நீ இந்த பொண்ணுக்கு நாலைஞ்சு குழந்தைகள் அனுக்ரகம் பண்ணனும் என்று கேட்கிற தோரணையில் இருந்தாள்.
ஆஹா! இந்த நம்பிக்கைதான் மனிதனை எப்படியெல்லாம் நடக்க வைக்கிறது? சிந்திக்க வைக்கிறது? செயல்பட வைக்கிறது? மனித சக்திக்கே நம்பிக்கைதான் மூலகாரணமாக இருக்கிறது? நேற்றிரவில் கணவன் கொடுத்தகடிதத்தை இடுப்பில் சொருகியிருந்த இடத்தில் தேடினாள் நர்மதா. பத்திரமாக இருந்தது. உறுத்திக் கொண்டேயிருந்தது. உடனே படித்துவிட வேண்டும் என்று மனசைத் துடிக்க வைத்துக்கொண்டு புடவையின் மடிப்பில் ஒளிந்து கொண்டிருந்தது. ஏதோ பூச்சி ஊர்வது போல் ஒரு சமயம் வேதனையைத் தந்தது. கடுதாசியாவது ஒண்ணுவது! தாலி கட்டிய பொண்டாட்டி கிட்டே வாயைத்திறந்து பேசாம கடுதாசி என்ன வேண்டிக்கிடக்கு? எந்த அந்தரங்கமும் அவர்களிடையே அந்தரங்கமாக இருக்க முடியாதே! மனம், வாக்கு, காயத்தால் பிணைக்கப்பட்டவர்களிடையே கடுதாசியாவது இன்னெண்ணாவது?
கறி காயை நறுக்கி வைத்துவிட்டு தயிர்கடைய ஆரம்பித்தாள். வெண்ணெய் திரண்டு பொங்கிவந்தது. அதைவழித்து வெள்ளிக்கிண்ணத்தில் போட்டு சுவாமி கிட்டெ கொண்டு வந்து வைத்தாள் கங்கம்மா.