உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

25

இருவரும் உள்ளே போனார்கள்.

“ராத்திரி ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தாப்பலே இருக்கே”

“எங்களையா கவனிச்சிண்டு இருந்தே” என்று கேட்டாள் பூரணி.

“ஆமாம்... மத்தவங்களை கவனிச்சுதானே ஆகணும் இங்கதான் ஒண்றும் இல்லியே”

“என்னடி சொல்றே”

நர்மதா மிக ரகசியமாகப் பட்டப்பாவின் அலட்சியத்தைப்பற்றி கூறினாள்.

“போடி மொதல்லே சில ஆண்கள் வெட்கப்படற மாதிரி தான் இருக்கும் நீ தான் சரிகட்டணும். மெதுவாக கிட்ட நெருங்கி புருஷனைத் தொட்டுப்பாரு ..”

“அவரே என்னைத்தொட்டு அணைச்சுக்கிட்டாரு”

“அப்புறம்?”

“அப்புறம் ஒண்ணுமில்லே. உங்க வீட்டு மாடியைப் பார்த்து உட்காந்து இருந்தேன். அவர் தூங்கிட்டார். நீங்களும், உங்க அவரும் கட்டில்லே ரொம்ப நெருக்கமா...”

“சீ சீ, மறந்துபோய் ஜன்னலை சாத்தாம இருந்துட்டேன் போல இருக்கு. ராத்திரி முழிப்பு வரும்போதெல்லாம் உன் ஞாபகம் எனக்கு. பட்டப்பா ஒரு மாதிரிபையன் ஆச்சே. பொம்பளை மாதிரி இருப்பானே...ன்னு நெனச்சுகிட்டேன்” என்றாள் பூரணி,

என்ன காரணமோ நர்மதா பூரணியிடம் பட்டப்பா கொடுத்த கடிதத்தைக்காட்டவில்லை. ஒரு மனுஷன் ஆண்மையற்றவனாக இருப்பதுபற்றி அவள் நடுத்தெருவில் நின்று கூச்சல்போட முடியுமா? வீட்டுக்குள்ளேதான் இரைந்து கத்தி ரகளை பண்ணமுடியுமா?

கடவுளே! இப்படியும் நடக்குமா? எங்கேயோ யாத்திரை போய்விட்டு வந்த அம்மா வரனைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தாள்.

அவளுக்கு அந்த சாயிராமின் பேரில் சந்தேகம். இவளைச்