பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவள் விழித்திருந்தாள்

தியா படுத்துத்தூங்கணும். இவர்காப்பி காப்பின்னு உசிரை எடுத்துட்டார். நீ ஜாலியா போயிட்டு வா-”

“நீங்க வாங்களேன் சார்” பட்டப்பா பேசினான். “ போயிட்டு வாங்க...கொஞ்சம் அவாளைத்தனியா விட்டுட்டு உட்காருங்கோ”

சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ஒரு வரிசையில் கடைசியில் ஒரு சீட் காலியாக இருந்தது. பின்புற வரிசையில் இரண்டு ‘சீட்’கள் இருந்தன. முதலில் பட்டப்பாவும், நர்மதாவும் பின்புற வரிசையில் உட்கார்ந்தார்கள். கடைசி ‘சீட்’ காலியாக இருந்ததில் பாலு உட்காரச் சென்றான். அந்த வரிசையில் பெண்களே இருந்ததால் இவன் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நர்மதா அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். தனியாக உட்கார்ந்திருக்க நர்மதாவுக்கு என்னவோபோல் இருந்தது.

விளக்குகள் அணைந்தன. படம் ஒட ஆரம்பித்தது. வழக்கமான ‘டூயட்’. ஓடிப்பிடித்தல், அனணத்தல். பின்புறமிருந்து ஒரு கை இருட்டில் அவள் தோளைத்தொட்டது. நர்மதா புல்லரித்துப்போனாள். கணவன்தான் என்று நினைத்தாள். அந்தக் கை அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியை வருடிக் கொடுத்தது.

பிறகு சிறிதநேரம் ஒன்றுமில்லை. திரும்பவும் தன்னை அந்தக்கரம் தொடவேண்டும் என்று ஏங்கினாள் அவள்.

இடைவேளையின்போது சீட்டில் பட்டப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். இவளைக் குறும்புடன் திரும்பிப் பார்த்த பாலு “கூல் ட்ரிங்ஸ் சாப்பிடறியா?” என்று கேட்டான்.

நர்மதா குழப்பத்துடன் தவித்தாள். கணவன் தூங்குகிறான். “உம்” என்று தலையை ஆட்டி வைத்தாள். இதற்குள் பட்டப்பா விழித்துக்கொண்டுவிட்டான்.

“ரொம்ப நாழியா தூக்கமோ?”

“என்னவோ அப்படி அசந்து போச்சு...எனக்கு இதெல்லாம் பிடிச்கிறதேயில்லை. அக்கா தொந்தரவு பிடிக்காம வந்தேன்” என்றான் மனைவியிடம்.