பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அவள் விழித்திருந்தான்

“நர்மதா! உன்னை நான் வேணும்னு ஏமாத்தலை. எனக்கு இப்படியொரு குறை இருக்குன்னு எங்க குடும்பத்திலே யாருக்கும்தெரியாது. வெளியிலே சொல்லக்கூடிய குறையில்லே இது. எனக்கு அம்மா அப்பா இல்லை. அக்கா வீட்டிலே வளர்ந்தேன். பெரிய படிப்பாளியுமில்லை. நிறைய சிநேகிதர்கள் என்கிற வியாபகமும் கிடையாது. பெண்களைக்கண்டால் மனசிலே ஒரு மலர்ச்சி ஏற்படும். அவர்களின் செளந்தர்யத்திலே ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். சரீர சுகத்திலே திளைக்கவேண்டும் என்கிற நினைப்பே எனக்கு எழவில்லை”

“எனக்கு ஆசை இருக்கிறதே. என்னை அது சுட்டுப் பொசுக்குகிறதே” என்று அவள் அலற நினைத்தாள். ஆனால், தேம்பித் தேம்பி அழுதாள்.

இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருவரும் மெளனமாக இருந்தார்கள்.

பூரணி பாலுவிடம், பாவம்! “அந்தப் பெண் எப்படி எப்படியோ இருக்க வேண்டியவள். இந்தக் குரங்கிடம் அகப்பட்டு கசங்கறது”. என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பாலு நர்மதாவின் நினைவாகவே இருந்தான். பூரணி பின் பக்கத்தில் மிக நெருக்கமாக நின்றாலும், அவள் நர்மதாவைப் போலவே தோன்றினாள்.

திடும்மென்று நர்மதா கேட்டாள்.

“நான் எங்கம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்...”

“சரி... எம்ப வருவே?”

அவள் பதில் பேசவில்லை.

“வருவியா நர்மதா?”

“உம்...”

அவள் இப்போது கண் கலங்கினாள். அவள் திடீரென்றுக் குலுங்கிச்சிரித்தாள்.

“அம்மாவான ஒவ்வொரு கடுதாசியிலேயும் நீ குளிக்கிறியான்னு எழுதிண்டு இருக்கா. உங்கக்கா தினமும் ஏழுமலையான என் வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகனும்னு வேண்டிக்கிறா ... எனக்கு சிரிப்பா வரது...”

“பிள்ளைப்பேறு இந்தக் காலத்துக்கு அனாவசியமாக இரு