பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அவள் விழித்திருந்தாள்



9

ஊரில் பட்டப்பாவுக்கு நர்மதா இல்லாமல் ஒன்றும் பிடிக்கவில்லை. அவளை ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. பெண்கள் ரொம்பவும் சரீர சுகத்துக்கு ஏங்க மாட்டார்கள். அவர்கள் கவனமெல்லாம் நகை நட்டு, வீடு வாசல் என்றுதான் இருக்கும் என்பது அவன் கணிப்பு. கங்கம்மா இல்லையோ? அத்திம்பேரும், அக்காவும் ஒரு நாள் உள்ளே சேர்ந்து படுத்திருந்து அவன் பார்த்ததில்லை. அவர் காற்றுக்காக வாசல் திண்ணையோ, மொட்டை மாடிக்கோ போய்விடுவார். அவள் இடுப்பில் சாவிகள் குலுங்க கார்வர்ர் பண்ணிக்கொண்டு வீட்டிலே வளைய வருவாள். அறுவடையாகி நெல் வந்தால் களஞ்சியத்தில் கொட்டிக்கொட்டி மூடுவாள். பணத்தை எண்ணி எண்ணி பீரோவில் வைப்பாள். ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டுப்பட்டாக வாங்கிக் கட்டிக் கொள்வாள். வித விதமாக சமைப்பாள். பலகாரங்கள் செய்வாள். அவ்வளவுதான்.

அத்திம்பேர் பக்கத்தில் வந்தால் கூட அவள் எட்ட நின்றே பேசுவாள். இப்படி ஒரு சூழ் நிலை.

வீட்டிலே பஜனை, பாட்டு என்று அமர்க்களப்படும்... அப்படியே அவள் காலம் போய்விட்டது. கணவன் இருந்ததற்கும், இல்லாததற்கும் அதிகமான வித்தியாசம் எதையும் அவள் உணரவில்லை.

நர்மதா ஒவ்வொரு இரவும் அழுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். பக்கத்துவீட்டு பாலுவை ஆவலுடன் பார்ப்பாள். வெறிபிடித்தவள்மாதிரி இவனை இறுக அணைத்துக்கொள்வாள். ஒன்றிரண்டு தடவை என்னை ஏமாத்தறயே பாவி என்னை ஏமாத்தறயே ஏழைன்னு என் தலையிலே நெருப்பை அள்ளிப் போட்டுட்டுயே நான் வாசல்லே நின்னு சத்தம் போட்டு உன்னை அவமானப்படுத்தறேன் பாரு' என்று ஆங்கார ஹூம்