உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

57

போச்சே, நீ போய்க்குடுத்துட்டு வாயேன்" என்றபடி தட்டில் எடுத்து வந்தாள்.

“நான் போகலை...”

“போனா என்னடி உன் கூடப்பொறந்தவன் மாதிரி”

நர்மதா பாலுவின் வீட்டுக்குள் போனாள்.

அவன் அவளை எதிர் பார்க்கவில்லை. “திடுக்கிட்டுப் பார்த்து என்ன கொண்டு வந்திருக்கே”

“போளி... அக்காதான் அனுப்பினா”

மேசை மீது வைத்தாள். “நான் போயிட்டு வரேன் பூரணி அக்கா எப்போ வருவா?” என்று கேட்டாள்.

“மசக்கை, மயக்கம் எல்லாம் தெளிந்தப்புறம்தான். என்னை நாலஞ்க மாசமா பட்டினி போட்டுட்டா...”

“மத்தியானம்கூட எங்க வீட்லே சாப்பிட்டீங்க. பட்டினியா?”

“நான் அந்தப் பட்டினியைச் சொல்லலே. வேறே பட்டினி!”

நர்மதாவுக்குப் புரிந்தது.

“போளிக்கு நெய் போட்டுண்டா நன்னா இருக்கும். சமையல் உள்ளே இருக்கு”

நர்மதா போனாள். அலமாரியிலிருந்து நெய் புட்டியை எடுக்கும்போது பாலுவின் கரம் அவள் தோளைப்பற்றி அழைத்தது.

“வேண்டாங்க”

“என்னது”

“வேண்டாங்க. உங்களைப் பார்க்கச்சேயெல்லாம் மனசாலே பாவம் பண்ணீண்டு இருக்கேன்”

“அதுதான் பெரிய்யதப்பு”

கைகளின் அழுத்தம் அதிகமாகியது. இருவரும் போளி, நெய் என்கிற விஷயங்களை மறந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நர்மதா கனவில் நட்ப்பது போல அவனுடன் படுக்கை அறைக்குள் சென்றாள். அவளுக்