பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அவள் விழித்திருந்தாள்

குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு பலிஷ்டனான ஒர் ஆணின் ஸ்பரிசத்தால் கொழுந்து விட்டுஎரிய ஆரம்பித்தது.

பாலு அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை தீர்க்கமாகப் பார்த்தான்.

“நர்மதா! ஏன் இப்படி ஏமாந்தே?”

“எனக்கு என்ன தெரியும்? இதையெல்லாம் கல்யாணத்துக்கு முன்னே எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?”

அவள் அழுதாள். கண்களின் மை கரைந்து கன்னத்தில் கோடாக இறங்கியது.

“இப்ப ஒண்னும் முழுகிப்போகலை. நீயும், நானும்...”

“அதெல்லாம் பாவம்க...பரம சாதுவாக, ஒண்ணும் தெரியாத மனுஷனை நான் ஏமாத்த விரும்பலே”

“நீ எப்படியும் யார்கிட்டேயாவது ஏமாறத்தான் போறே”

பாலுவின் கரங்கள் அவளை வலுவாகப்பற்றிக் கொண்டிருந்தன. மங்கிய விளக்கொளியில் அவள் தேவதையாகத் திகழ்ந்தாள். சினிமாவில் தொட்டுப்பார்த்த அவன், பஸ்ஸில் நெருங்கி உட்கார்ந்த அவன், இப்போது வெகுசுவாதீனமாக அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது பட்டப்பா உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு வந்தான்.

இருவருக்கும் நெருப்பில் சுட்டுக்கொண்டமாதிரி இருந்தது.

“நீ இங்கயா இருக்கே?”

“அக்கா போளி குடுத்துட்டு வரச்சொன்னா”

அவள் பயந்தாள். நாக்கு உலர்ந்து விட்டது. “ஒண்னுமில்லை பட்டப்பா! பூரணிகிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அதைத் தேடிண்டு இருந்தோம்.”

நர்மதா போய்விட்டாள். இரவு கங்கம்மா, “சுவாமி பாலை எடுத்துண்டு போ... குருவாயூரப்பனுக்கு தொட்டில் வாங்கிவைக்கறேன்னு வேண்டிருக்கேன்” என்றாள்.

பகவானின் நைதேத்யமான பாலை எடுக்க அவள் கூசினாள்.