பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அவள் விழித்திருந்தாள்

அவள் அன்று முதன் முதலாகக் கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் கைகளைப்பற்றி வருடினாள். “இத்தனை மருந்து சாப்பிடறேளே. குணம் தெரியறதா?” என்று கேட்டாள்.

அவன் சலிப்புடன் “ஊஹும்” என்று தலையை ஆட்டினான். “அதனால என்ன? நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தையா இருந்துட்டுப் போறோம். உங்கக்கா நச்சரிப்புதான் தாங்கலை”

“நீ குழந்தை பெத்துக்கலைன்னா அவ எனக்கு வேறே பொண்டாட்டி கட்டி வைக்கப்பார்ப்பா. ஆன, உனக்கு வேறே புருஷன்கிறதை இந்த சமூகம் ஒத்துக்காது”

மனைவி தனக்குள் தான் தீய்ந்து கருகி வருகிறாள் என்பதும்,

அதற்குத் தானேதான் காரணம் என்பதும் பட்டப்பாவுக்குப் புரிந்தது.

வெகுநேரம்வரை இருவரும் பேசாமல் இருந்தார்கள். பிறகு தூங்கிப்போனார்கள்.