பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அவள் விழித்திருந்தாள்




இந்தப்பெண் ஏனிப்படி மாறவேண்டும்? அவளுடைய சிரிப்பு எங்கே போயிற்று? இவனிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்த அவளுடைய வெகுளித்தனம் எப்படிமாறியது

சில நாட்களில் நன்றாக உடுத்திக்கொள்கிறாள். பல நாட்கள் ஏனே தானோ என்று இருக்கிறாள். ஓயாமல் கங்கம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து பணி விடை பண்ணிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் புரியவில்லை.

ஊரிலிருந்து அம்மாவை வரவழைத்தாள் நர்மதா. ரயிலில் தன்னுடன் கொள்ளைப்பேச்சு பேசிய சிநேகிதி வாயடைத்துப் போய் முகம்கோணி படுக்கையில் கிடப்பதைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய வீட்டையும், அதில் நிறைந்திருந்த செல்வத் தையும் பார்த்து அதிசயித்தாள்.

"கங்கம்மா:இவ்வளவு பணக்காறியா? பட்டப்பாவுக்குத் தான் இத்தனை சொத்தும் சேரப்போகிறதா? உக்கிராண உள் பூராவும் அரிசி மூட்டைகளும், மற்ற சாமான்களும் நிறைந்திருந்தன. -

கொல்லையில் பூவாய்ப் பூத்தது. எலுமிச்சை, நாரத்தை என்று காய்கள் குலுங்கின.

தன் அருகில் உட்கார்ந்திருந்த சிநேகிதியின் கைகளை சுவாதீனமாக இருந்த ஒரு கையினால் பற்றினாள். கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. நர்மதாவையும் பட்டப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பார்வையில் மன்னிப்பு கேட்கும் பாவம் தெரிந்தது.

"உனக்கு தெரிஞ்சா பண்ணினே? அதெல்லாம் எனக்குக் கோபம் இல்லை வருத்தப்படாதே" என்றாள் வெங்குலட்சுமி. நர்மதாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது. நாம சொல்லாம இருந்திருந்தா இந்த மனுஷி நன்னா இருந்திருப்பாளே. வாக்குலே சனியன் மாதிரி உளறி வைச்சோம்.

வெகு நாட்களுக்குப் பிறகு அன்றிரவு நர்மதர் படுக்கை அறைக்குள் போனாள். கங்கம்மா நோயாய்ப் படுத்த பிறகு அவள் உள்ளேபோய் படுப்பதில்லை. தாபத்தீயினால் உடலைப் பொசுக்கிக் கொள்வதில்லை.

பூரணி மட்டும் இவளிடம் ரகசியமாகக் கேட்டாள்.

"இப்படியே உங்காலத்தை ஒட்டப்போறியா?"