உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி £57

12

கங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பணி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் என்ன்க் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.

பட்டப்பா துடிதுடி த்துசதுப்போனன். தாயைவிடப்பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப் பார்த்து, அது நிறைவேறாம்ல் நிறைவேறாது என்று உறுதியா கக் தெரிந்துகொண்டு அதிர்ந்துபோய்,பேசும் சக்தியை இழந்து அவள் நாலந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஒய்ந்தும் போனாள்,

பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசிபோல் சாவிகள் குலுங்க வளேய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் கொடுப்பாள். பாலுவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவ்து கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.

நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்துவிட்டுப் பூரணி யாடு பேசினாள். பட்ட்ப்ப்ர்வோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத்தான்ே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்துபோனாள் நர்மதா,

வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷய்ங்களையும் கேள்விப் பட்ட சரியிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்். விட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட் சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நில புலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக்கொண்டி ருந்தான்். எல்லாவற்றுக்கும்மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரமரகசியமான விஷயத்தைஇவனிடம் தெரிவித்தான்்.