உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - அவள் விழித்திருந்தாள்

13

கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான்் இல்லறம். அந்த வீட்டில் கிருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்ல்ை நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும். தெந்துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட ஞானி என்று சொல்லமுடியாது. அந்தஏக்கம் அவளைத்தின்று கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந் துட்டுப்போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர் உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.

இப்படியொரு போலித்தனம், அவள் வர வர எதிலுமே பிடிப்ற்றுப்போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச் சாப்பிடுவ்தில்லை. சில நாட்களில் ஊஞ்சலில் படுத்திருப்பாள். சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத்துாங்கி விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.

அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால்தானே பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது? பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண் னில் ப்டுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.

இந்தத்தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு மாசங்க்ள் கழித்துப்பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் மூன் நர்மதாவைத்தேடி வந்தாள் அவள்.

'இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு செய்யமாட்டேன?' என்றாள். நர்மதா, ".

"அதெல்லாம் முடியாது நர்மதா அம்மா இல்லாமல் என்னால் தைரியமா இருக்கமுடியலை நான் போயிட்டுவறேன்: எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக்கொண்டும் எங்கவீட்டுக்குப் போகவேண்டாம்.'" -

L