சரோஜா ராமமூர்த்தி 7 I
'ஏன்?"
'காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?"
நர்மதா தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி அரை மனசோடு டோகிறாள் என்பதும் புரிந்தது.
அன்று பட்டப்பா சாப்பிடும்போது, "நாம இரண்டு பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே இருந்து அலுத்துப்போச்சு' என்று நர்மதா கேட்டாள்.
"எங்கே போகிறது?’’
'போறத்துக்கு இடம்தானாஇல்லை? இப்படி காசி ராமேஸ் வரம்னு போறது. பணமா இல்லை. அக்காபோய் இரண்டு வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை"
'எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. இவ்வளவு பெரிய வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன் வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா போயிட்டு வாயேன். எந்தனையோ டுரிஸ்ட் பஸ் போறது.' அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக்கூப்பிட அவன் தட்டிக்சழிக்க, இப்பயே நாட்கள் ஓடின. -
முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திர மாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டுவிட்டுப் போவான். இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்தி ருந்தாள்.
"காரணம் உனக்கே தெரியும் சே! எத்தனை பெரிய வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரிய மில்லை. என் பேரில் பழியை போட்டுவிட்டுப் போகிறாள். நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க முடியும். சே!...” o
பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான்். தப்பித் தவறி வரமாட்டாளா?
கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், 'சாப்பாடு கிடைக்குமா?' என்று கேட்பான். "ஓ! ராத்திரி எட்டு மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்'
பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு