பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 73

'நீங்க நினைக்கிற மர்திரி இல்லை...' அவள் அழுதாள்.

'இருந்தாத்தான்் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக் கொண்டே இருக்கே?"

அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம் பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான்். நர்மதாவின் உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த் துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன்றியது. அந்தப்பெண்ணே இப்படி மாய விடுவது மகத்தான் துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.

கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?

அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான்் விலகிப்போய்விட வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவ தில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில் லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக்கவில்லை.

கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா? எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இட மில்லை. சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள் வெந்துகொண்டிருக்கிறாள்.

நாலந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல் இரவில் அவளிடம் கொடுத்த கடிதம்ւգ- நினைவுக்கு வ ந்தது. இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப்

போட் டான்.

'நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி இருக்கலாம்." இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக் விழித்தான்். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன் போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு அணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர 醫燃 முக்யத்வம் கொடுக்கிறதனால் இந்த நாட்டில் இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான விதவைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறு