பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 o’. அவள் விழித்திருந்த்ாள்

வதில்லை. ஏதோ ஒர் உன்னதமான உணர்வு அவர்களின் மனசில் நிலையாக இடம் பிடித்திருப்பதனால்தான்்.அவர்களால் அப்படி இருக்க முடிகிறது. o

வெளியே வானம் நிர்மலாக இருந்தது. நஷத்திரங்கள் பொரிந்து கிடந்தன. சுகமான காற்று வீசியது. யார் வீட்டு ரேடியாவோ தன்யாசியை மீட்டிக்கொண்டிருந்தது. இரவின் முதல் ஜாமத்தில், ஊரடங்கிக் கிடக்கும்போது ஒலித்த சுஸ் ஸ்வரமான அங்கீதம் அவனை அழ வைத் தது. இறைவன் நாமத்தை மனமாறப் பாடிக் கேட்கும்போது ஏற்படுகிற உணர்வு இருக்கிறதே-சுகம் இருக்கிறதே-அதற்கு ஈடு இணை இல்லை. அவன் நாத வெள்னத்தில் லயித்துப்போயிருந்தான்். இப்படி பாடிக்கொண்டு கோகுலம், பிருந்தாவனம், மதுரை என்று போய்விடலாமா? மேவாரின் அரசியாக இருந்த மீரா உலக பந்தங்களின் தளைகளை உடைத்துக் கொண்டு சுதந்தி ரமாக ஒரு பறவைபோல், காற்றுவெளியில் மிதக்கிற சுகர்னு பவத்தை நுகர்ந்து கொண்டு பிருந்தாவனத்துக் கண்ணனை தரிசிக்கப்போனாளாமே . அம்மாதிரி ஒரு உணர்வு தனக்கும் ஏற்பட்டு இப்போதே இந்த வீடு, வாசல், நர்மதா எல்லோ ரையும் மறந்து அவனை நாடிப்போனால் இதற்குப் பரிகாரம் கிடைக்குமோ! - *

நஷத்திர ஒளியை, வைகறை என்று நினைத்து ஒரு பறவை ஜிவ்வென்று பறந்து போயிற்று. எல்லா ஜீவராசிக்ளையும்விட பறவை இனங்களுக்கு இயற்கையிலேயே ஒரு வரப்பிரசாதம் உண்டு. விண்வெளியில் சுத்தமான காற்றை உட்கொண்ட படி பறந்து திரியும் சுகம் அவைகளுக்கு உண்டு.

மேஜைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன்அப் படியே தூங்கிப்போனான். ... ."