சரோஜா ராமமூர்த்தி 77 -
"அப்ப என்னதான்் பண்ணப்போறே?"
'இப்படியே இருக்கிறது. என்னைப்போல கல்யாணம் ஆன பெண்கள் சவரணையா இருந்தா மூணு குழந்தைகள் பெத்துண்டு இருப்பா. அதுகளுக்கு வியாதிவரும், டாக்டர் வீட்டுக்குப்போவாள் கணவன் தன்னை நெருங்கி வரும்போ தெல்லாம் தன் மூணு குழந்தைகளைக் காட்டிக்காட் டி விலகிப் போயிண்டு இருப்பா. அவன் அ டு த் த வீட்டிலே, எதிர் வீட்டிலே யாராவது கிடைப்பாளான்னு பார்த்திண்டிருப் பான். இப்போ எனக்கு இந்தச் சள்ளையெல்லாம் இல்லை." அவள் பளிச்சென்று சிரித்தாள்.
'நீ இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கே.' "எப்படி இருக்கிறது? நன்னாத்தானே பளிச்சுனு இருக்கேன்?"
'அதான்் என் மனசைச் சங்கடப்படுத்தறது; இத்தனை அழகும் வீணாப்போறதேன்னு."
'அழகு எப்படி வீணாப்போகும்? அது பால்யத்திலே ஒரு தினுசா சரீரக் கவர்ச்சியோட இருக்கும். நடுத்தர வயசில் தாய்மையாகப் பிரகாசிக்கும். வயசானாப்புறம் அனுபவமா முதிர்ந்துபோகும். எல்லா வயசிலும் அழகு நிலையாத்தான்் இருக்கும். உங்கக்கா கங்கம்மா நன்னா அழகாத்தான்் இருந்தா வியாதி வந்து படுத்துண்டப்புறமும் நன்னாத்தான்் இருந்தா. பொணமானப்புறமும் பளிச்சுன்னு இருந்தா. அழகுங்கறது மனசிலே இருக்கு '
பட்டப்பா அவளுடன் வாக்குவாதம் புரிவதை நிறுத்திக் கொண்டான். இவள் தன்னைவிட்டு அகலமாட்டாள் என்பது திடமாகப்புரிந்தது. இனி தான்்தான்் இவளே விட்டுப்போக வேண்டும். அவள் புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கணவனுக்கு எதிரில் தன்னை ஒரு பதிவிரதையாக, மகத்தான் வளாக, ஒழுக்கமுள்ளவளாக இன்னும் எப்படியெல்லாமோ இருக்க ஆசைபடுகிற ஜன்மம் அவன் அந்த வீட்டில் இருக்கிற வரையில் நர்மதா தனக்குள் கருகித் தீய்ந்துதான்் போவாள் என்பது அவனுக்குத் தெரிந்துபோயிற்று
வழக்கம்போல ஒரு நாள் சாலையில் காப்பி சாப்பிட்டு விட்டு ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் வட இந்திய யாத்திரை ஸ்பெஷல் ஒன்றைப்பற்றிப் படித்தான்்.
'நான் ஏன் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு போய்