பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 = அவள் விழித்திருந்தாள்

அதைப் பழக்கப்படுத்திண்டு வரேன். என்னை அப்படியெல் லாம் தூண்டாதீங்கோன்னேன். அப்புறமா அவர் என்னோட இரண்டு நாள் பேசாம இருந்தார். என் புடவைகளோட இந்த பாங்க் புஸ்தகம் இருக்கு. ரொக்கமா ஐம்பதினயிைரம் எம்பேர்லே போட்டிருக்கார்.'

பூரணி திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"வேறே கடுதாசி கிடுதாசி ஒண்ணும் இல்லை."

"எங்கே போயிருப்பார்?' "அதானே புரியலே. நான் எப்படி தனியா இவ்வளவு பெரிய விட்டிலே இருக்கிறது? பயமா இருக்கு ..'

'ஒண்னு பண்ணு. ஊர்லேந்து உன் அம்மாவை வர வழைச்சு வைச்சுக்கோ. பாவம், இந்தத் தள்ளாத வயசுலே யாராத்துலேயோ சமைச்சின்டிருக்கான்னு சொல்றியே...'

'அப்படித்தான்் பண்ணனும் ...'

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது பாலு வந்தான்் இப்போதெல்லாம் அவனுக்கு நர்மதாவைப்பற்றி ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அன்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டபிறகு அவளிடம் அவனுக்கு ஒரு பயமே ஏற்ப்பட்டது.

நர்மதாவும் சட்டென்று எழுந்து விட்டாள். - நர்மதா விரிவாக அம்மாவுக்கு எழுதினாள். 'உன் மாப் பிள்ளையை ஒரு வாரமாகக் காணவில்லை. நான் தனியாக இருக்கேன். கிளம்பி வரவும்..." - சிலரால்தான்் ரகசியங்களை காப்பாற்றமுடியும். பலரால் காப்பாற்றமுடியாது. * - - வெங்குலட்சுமி எட்டு குடித்தனங்களுக்கும் தெரியும்படி இரைந்து கத்தினாள். * * "படுபாவி! எம்பொண்ணை-கிளியாட்டமா இருக்கிற ஏமாதிக்கல்யாணம் பண்ணிண்ட பாவம் போதாதுன்னு அவளை விட்டுட்டு ஓடியும் போயிட்டான்!'"

சாயிராம் சிந்தித்தான்். என்ன ஏமாற்றினான்? புரிந்து போயிற்று