பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி S 5

15

சொத்துக்களைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க ஒரு மாதத்துக்குமேல் ஆயிற்று. இன்னொரு கடிதம் வராதா என்று எதிர்ப்பார்த்தாள். ஏமாந்தாள் ஒன்றும் தகவல் இல்லை. 'இந்த மட்டும் தற்கொலையில் இறங்காமல் உசிரோட இருக்கேன் என்று கடுதாசி போட்டர்ே என்று சந்தோஷப் பட்டாள் நர்மதா,

வெங்குலட்சுமிக்குக் காசிக்குப் போகப்போகிறோம் என்ற வுடன் உற்சாகம் பீறிட்டுக்கொண்டு கிளம்பியது. அங்கே சமைத்துச்சாப்பிட அது இது என்று நாலைந்து டப்பாக்களை நிறப்பிக்கொண்டாள். சிலருக்கு அதிக து க் க ம் ஏற்பட்டு விட்டால் மனசு கல்லுப்பட்டுப் போய்விடுமாம்.

நாரத்தங்காயிலிருந்து சுண்டைக்காப்வரை எடுத்து வைத் தாள். ந ர் ம. தா சுத்தமாக எல்லா நகைகளையும் சழற்றி 'பாங்க்கின்' பாதுகாப்பில் வைத்தாள். திருமாங்கல்யச் சரடு, கண்ணாடி வளையல்கள், ஒற்றை மூக்குத்தி, தோடுகள், நாலு ல புடவைகள.

'என்னடி வே ஷ ம் இது? அவன் எங்கேயாவது நன்ன இருக்க வேண்டா மோ?"

'இதோ' என்று திருமாங்கல்யத்தைக் காண்பித்தாள். 'நன்ன இருக்கு பளிச்சுனு இருந்தாத்தான்் நாலுபேர் மதிப்ப. போற இடத்திலும் மதிப்பு கிடைக்கும்.” o

அம்மாவோட என்ன தர்க்கம் வேண்டியிருக்கு. அவ மனசு அப்படி என்று அவள் அதிகம் பேசவில்லை.

'இரண்டு நாள் என்னொடு இரேன்' என்று பூரணி கூப்

ட்டாள்.