பக்கம்:அவை பேசினால்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ij வாழ்விலே பல விலங்குகளும் பறவைகளும் கூடிக் கலந்து வாழ்கின்றன. அவைகள் பேசு வதனுல் மனிதனுக்கு எத்தனையோ உண்மைகளை விளக்கும். பறவைகளும் விலங்குகளும் மட்டு மன்றி மரஞ்செடிகளும் ஊர்வனவும்கூட எத்தனையோ நீதி களேப் புகட்டும். அந்தக் கற்பனையில்தான் இந்த நூல் உருவாகின்றது. மனிதன் நாள்தோறும் தன் கண்முன் கானும் விலங்குகளும் பறவைகளும், பிறவும் தன்னைப் பற்றி என்ன நினைக்கின்றன என்பதை உணர்வானு யின் ஒருவாறு அவன் வாழ்க்கை நல்ல வழியில் , , o • - - 姆 . می گیر سر ○ リ。 திருந்தக் கூடும் என்ற எண்ணத்திலேயே இந்த முயற்சியை மேற்கொண்டேன். இந்நூலே எளிய முறையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதியிருக்கிறேன். கிராமங் களில் வாழும் கல்லாதவர்களும், சிறிது படிக்கக் கற்றவர்களும் சிறுவர்களும் தம்மைச் சுற்றி உயிர் வாழும் பறவைகளும் விலங்குகளும் பிறவும் தம் மைப் பற்றி என்ன நினைக்கின்றன என்பதை எண் னிப்பார்க்க இந்நூல் உதவி செய்யக் கூடும் என நம்புகின்றேன். இந்நூலில் எடுத்துக் காட்டுகளாக ஒரு சில வற்றைத்தான் காட்டியிருக்கின்றேன். இவ் வாறே கண்முன் காணும் ஒவ்வொரு பொருளும் மனிதனுக்கு எத்தனையோ உண்மைகளே உணர்த் திக்கொண்டுதான் வருகின்றன. அறிவு பெற்ற மக்கள் அவற்ருல் தம் வாழ்வைத் திருத்திச் செம்மையுறுவார்கள் என நல்ல உணர்வோடு இந் நூலே அவர்கள் முன்வைக்கின்றேன். ஆசிரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவை_பேசினால்.pdf/6&oldid=742080" இலிருந்து மீள்விக்கப்பட்டது