பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்93அவங்களை நினைச்சிக்கிட்டு 2 மணினா அவங்களுக்கு பகல், நா.பா. பேசறேன் ஆசா. கண்ணோட கண் மூடல. நீங்க சொன்னதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்தேன். பெருந்தவறு பண்ணிட்டேன் என்று சொல்லி அழுதான். பார்த்தசாரதி மறந்துரு. தீர்ந்து போச்சு. உன்னுடைய கண்ணிராலேயே கழுவிட்ட அவன் எப்பேர்ப்பட்ட புலவன்-கிறத இப்போப் பேசி பிரயோஜனம் இல்ல பார்த்தசாரதி. இப்பவும் சொல்றேன். இன்னும் யாரும் அவனைப் புரிஞ்சுக்கல்ல. பாரதியையும் ஒருத்தனும் ஒத்துக்கல்ல, நாட்டுப் பாடலைச் சொல்லிக் கதையடிக்கிறவன்தான் இருக்கான்.

பாரதி கவியுளம் காண்கிலார் என்று பாடுனானே, அது இரண்டுபேருக்கும் சரியானது. பாரதிதாசனை வைச்சு உபயோகப்படுத்தினாங்க எல்லாக் கட்சிக் காரங்களும். அதைத்தவிர அவனை உண்மையா உணர்ந்தவர்கள் யாரும் இல்ல. இன்னொரு ஐம்பது வருஷத்துக்குப் பின்னால அவன் செத்து ஐம்பது வருஷம் ஆகணும். அப்பத்தான் evolution வரும். விருப்பு-வெறுப்பு நீங்கும். அதற்கப்புறம் நா.பா. சொன்னான்: நல்ல பாடம் கற்பிச்சீங்க. ஒண்ணுமில்லப்பா, இந்த மாதிரி கவிஞன் நம்ம அதிர்ஷ்டம். ஒரே நாளில இரண்டு பேரும் இருந்தாங்க. பொசுக்குன்னு போயிட்டாங்க இரண்டு பேரும்.

இன்னும் 100 வருஷம் ஆகணும் இன்னொரு கவிஞன் வருவதற்கு. ஆகையினால் அவரை நினைக்கும் போதெல்லாம் அதற்கு புஸ்தகத்தை விரிவா எழுதணும்னு ஒரு ஆசை எனக்கு. இப்ப எனக்கு என்ன கோளாறுனா, படிக்க முடியாது. அதோட 2-3 வேறு வேலைகளைக் கையில வைச்சிக் கிட்டு இருக்கேன்.