பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்


121. அந்தக் காலத்துல 200, 300 வாங்குற பாக்கியம்.

ஒளவையார்னு ஒன்னு எழுதினார். இராஜ முத்திரைனு ஒன்னு எழுதினார்.

122. இதுக்கு பாரலல் தமிழ் பொயட்ரில இருக்கு.

கோனார்கிட்டப் போய் பாடுறான். கோனார், எங்க வீட்டு அடுப்புக் குமிழ் தேயலை என்று. பானை ஏறுனாத் தானே தேயும், அந்த மாதிரி ஒரு வறுமை. உள்ளே பூனை படுத்திருக்கிறது. ஒரு சொகுசா எப்பவோ நெருப்பு பட்டதலா அந்த வெதுவெதுப்புல அது உள்ளே படுத்திருக்கிறது. அடுத்து, அவன் யானை கொடுத்தானாம், பரிசு. கொண்டு வந்து கொடுத்துப் பெண்டாட்டிகிட்ட சொல்றான். இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது பல்லாண்டு வாழ்தும் என்னாது. யோசனை பண்ணாதே ஏங்க, இவங்க கேட்குறாங்களே அப்படின்னுட்டு எங்கிட்ட வந்து கன்சல்ட் பண்ணாதே, வாரிக் கொடு என்று. இந்தப் பயல் வீட்டில் நேத்து வரையில அடுப்பு எரியல, இந்த மாதிரி வந்தா கதவைச் சிக்குனு சாத்திடுனு சொல்றத விட்டுட்டு, இதப் பத்தி கவலையே படாம நீ வாரிக் கொடுத்திடுன்னு சொல்றானே- இந்த மனோநிலையை. இந்தப் பாட்டத் தான் எல்லாத் தமிழ்ப் பண்டிதனும் ஒத்துகிடத் தெரியும். இந்த மனோநிலை நேற்றைய வரையில, சுவைத்தொறு அழுஉம் தன் மகத்துமுகம் மறப்புலி உரைத்து மதியம் காட்டியும். உள்ளே வாய வைத்து இழுத்துப் பார்க்குது. ஒன்னும் வரல. அதைச் சொல்றாளாம். மறப்புலி உரைத்தாலும் மதியம் காட்டினாலும் ஒன்னுக்கும் சட்ட பண்ணல அது. புலியைச் சொல்லி அச்சுறுத்தினாலும் சந்திரனைக் காட்டி வேடிக்கை காட்டினாலும் குழந்தையைச் சமாதானப் படுத்த முடியவில்லை. பெத்தானே உங்க அப்பன்